Pages

வாசகர் வட்டம்

Sunday, March 28, 2010

தனது ஊருடன் பெயரையும் இணைத்திருக்கும் இலங்கை பிரபலங்கள்

தனது ஊருடன் தனது பெயரையும் இணைத்து இருந்த பிரபலங்களை பற்றிய பதிவு தான் இது.... இதை
ஞாபகமூட்டலாகவும்.... தெரியாதவற்றை பலர் மூலம் தெரிஞ்சு கொள்ளும் நோக்குடனும் இதை நான் தொடக்கி வைக்கிறேன்.

காவலூர் இராசதுரை-ஊர்வாகவற்றுதுறை- எழுத்தாளர்
குப்பிளான்.ஜ.சண்முகம-குப்பிளான் - எழுத்தாளர்

சில்லையூர் செல்வராஜன்--- சில்லாலை- நடிகர், வசனகர்த்தா, வானொலி அறிவிப்பாளர்

செம்பியன் செல்வன்-செம்பியன்பற்று- எழுத்தாளர்திருக்கோவில்
கவியுவன் - திருக்கோவில்- எழுத்தாளர்
தெளிவத்தை யோசப் - தெளிவத்தை- எழுத்தாளர், நாவலியூர் சோமசுந்தர புலவர் - நாவலி- கவிஞர்


நீர்வை பொன்னையன் - நீர்வேலி- எழுத்தாளர்


நெல்லை க.பேரன் -- நெல்லியடி- எழுத்தாளர்

மாத்தளை சோமு- மாத்தளை- எழுத்தாளர்

நெல்லை நடேசன்-நெல்லியடி- எழுத்தாளர்

புலோலியூர் சதாசிவம்-- புலோலி - எழுத்தாளர்.. இவர் புலோலியூர்
இரத்தினவோலோனின் மாமனார்

கரவைக்கிழார்- கரவெட்டி - பண்டிதர், கவிஞர்

கோப்பாய் சிவம் - கோப்பாய் - எழுத்தாளர்


வண்ணை ஆனந்தன்- வண்ணார் பண்ணை .... - அரசியல்வாதி..,பிரபல மேடை பேச்சாளர்

கைதடி பழநி- கைதடி-- தவில் வித்துவான்

உடுப்பிட்டி சிவா- உடுப்பிட்டி.. மூத்த அரசியல்வாதி

காரை சுந்தரம்பிரம்பிள்ளை- காரைநகர்- பேராசிரியர் ,படைப்பாளி

இணுவையூர் சிதம்பரநாதன்- இணுவில்- எழுத்தாளர்
முல்லை சகோதரிகள் -முல்லைத்தீவு பாடகிகள்
.
யாழ் சுதாகர்- யாழ்நகர்- எழுத்தாளர், தமிழ்நாட்டு சூரியனின் எப்எம் இரவு நேர அறிவுப்பாளர்


யாழ்வாணன்- யாழ்நகர்- எழுத்தாளர்யாழ் நங்கை- யாழ் நகர்-எழுத்தாளர்

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம்- கோப்பாய்- மூத்த அரசியல்வாதி

ஆவரங்கால் சின்னத்துரை -ஆவரங்கால்- அரசியல்வாதி

வரணியூரான் கணேசபிள்ளை- வரணி- வானொலி நாடக ஆசிரியர்

திக்குவல்லை கமால்-திக்குவல்லை எழுத்தாளர்
-

அளவெட்டி பத்மனாதன்- அளவெட்டி- நாதஸ்வர வித்துவான்

மறவன்புலவு சச்சிதானந்தம் -மறவன் புலவு - அறிஞர்

புலோலியூர் இரத்தினவேலோன்.- புலோலி -எழுத்தாளர்- இவர் எனது வகுப்பு தோழன்

புதுவை இரத்தினதுரை- புத்தூர் -படைப்பாளி,

வேலைணையூர் சுரேஷ்
இவர் தற்சமயம் வன்னியில்(கிளிநொச்சி) இருக்கிறார். கவிதைகள் எழுதி தொகுப்பாகுவும் வந்துள்ளன. பாடல்களாகவும் இசைப்பேழைகளில் வந்துள்ளன.- வேலணை


ஏழாலை ஜெனகமகள் சிவஞானம் -- எழுத்தாளர் --- ஏழாலை

மணலாறு விஜயன் - எழுத்தாளர்- மணலாறு

வவுனியா திலீபன் -எழுத்தாளர்- - வவுனியா

முல்லை கோணேஸ் -எழுத்தாளர் -முல்லைத்தீவு

முல்லை கமல் -எழுத்தாளர் -முல்லைத்தீவு

இளவாலை விஜயேந்திரன் -இளவாலை - கவிஞர்


பூநகரி மரியதாஸ், கவிஞர் -பூநகரி

திக்கவயல் தர்மு, எழுத்தாளர், பத்திரிகையாளர் - திக்கவயல்

திக்குவல்லை கமால், கவிஞர் -திக்குவல்லை

அமிர்தகழியான், எழுத்தாளர் - அமிர்தகழி

நவாலியூர் சச்சிதானந்தன், எழுத்தாளர் - நவாலி

'இளவாலை அமுது' -.எழுத்தாளர், கவிஞர் -இளவாலை

மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.// - மாதகல்


வேலணை வேணியன் -தற்போது மேலக மக்கள் முன்னணிப் பிரமுகர்-
வேலணை

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர் - இணுவில்

கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்- கோண்டாவில்

யாழ் சீலன் - இசைக்கலைஞர்- யாழ்நகர்

யாழ் ரமணன் - இசைக்கலைஞர்-யாழ்நகர்

நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர் -
நாச்சிமார்கோவிலடி

திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.- திருக்கோவில்
கல்லாறு சதீஸ் - எழுத்தாளர் - கல்லாறு

வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்-- வரணி

தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்

நிலா(வெளி) தமிழின் தாசன் - நிலா வெளி
கவிஞர்

வவுனியன் - கவிஞர் - வவுனியா

அடடா சின்னக்குட்டி அவர்களே
சிரமப்பட்டுத்தான் இவற்றைச் சேர்த்திருக்க முடியும்
இந்தத் தலை முறையினருக்கு இது ஒரு அடிச்சுவடு
பாராட்டுக்கள்

ஆமாம் உங்கள் ஊர் எது?
அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே!
SP.VR.சுப்பைய
19 டிசம்பர், 2006 இரவு 19:52 கொழுவி said...
புதுவையார் புத்தூரைச் சேர்ந்தவர்.
19 டிசம்பர், 2006 இரவு 19:56 சின்னக்குட்டி said...
வணக்கம....சுப்பையா அவர்கட்கு.... உங்கள் வருகைக்கும்.. பாராட்டுக்கும் கருத்துக்கும்

//ஆமாம் உங்கள் ஊர் எது?
அதைக் குறிப்பிடாமல் விட்டுவிட்டீர்களே//

நான் ஊர் பெயரோட இருக்கிற பிரபலம் இல்லைங்க.. அதோடை. இப்பொழுது ஊரற்ற வழிபோக்கன்,நாடோடி, ஒரு அகத

19 டிசம்பர், 2006 இரவு 20:07 சின்னக்குட்டி said...
வணக்கம் கொழுவி.. தவறை சுட்டி காட்டியதற்க்கு நன்ற

19 டிசம்பர், 2006 இரவு 20:09 Chandravathanaa said...
விடுபட்டவைகளில் என் நினைவில் வந்தவை

வேலைணையூர் சுரேஷ்
இவர் தற்சமயம் வன்னியில்(கிளிநொச்சி) இருக்கிறார். கவிதைகள் எழுதி தொகுப்பாகுவும் வந்துள்ளன. பாடல்களாகவும் இசைப்பேழைகளில் வந்துள்ளன.

ஏழாலை ஜெனகமகள் சிவஞானம

19 டிசம்பர், 2006 இரவு 20:43 சுந்தரி said...
காசியானந்தன் எந்த ஊருங்
19 டிசம்பர், 2006 இரவு 20:53 சின்னக்குட்டி said...
வணக்கம்...சந்திரவதனா..வருகைக்க
ும்...... மேலதிக தகவலுக்கும்...நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 21:02 சின்னக்குட்டி said...
வணக்கம் சுந்தரி... காசி ஆனந்தன்.... காத்தமுத்து சிவானந்தன் என்ற முழு பெயரை அப்படி சுருக்கி கொண்டார்....

காசி ஆனந்தன்....மட்டகளப்பைச் சேர்ந்தவர்.......பாலுமகேந்திராவ
ன் ஊருங்

19 டிசம்பர், 2006 இரவு 21:03 Anonymous said...
மணலாறு விஜயன

19 டிசம்பர், 2006 இரவு 21:35 சின்னக்குட்டி said...
வணக்கம்... அநோமதய நண்பருக்கு... உங்கள் தகவலுக்கு நன்றி.... புதியவர்களை எனக்கு தெரியாததால் உறுதிபடுத்த முடியாமிலிருக்கிறது....... என்ன விததித்தில் பிரபலம் என குறிப்பிட்டீங்கள் என்றால் உதவியாய் இருக்கும்.....

19 டிசம்பர், 2006 இரவு 21:46 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
நல்ல தகவல்கள். மிக்க நன்றி.
ஆட்சேபனை இல்லையெனின் ஒரு சின்னத் திருத்தம்.

/* அளவெட்டி பத்மனாதன்- அளவெட்டி- தவில் வித்துவான் */

பத்மநாதன் தவில் வித்துவான் அல்ல. நாதஸ்வர மேதை.

நன்றி.

அன்புடன்
வெற்ற

19 டிசம்பர், 2006 இரவு 22:10 வசந்தன்(Vasanthan) said...
சின்னக்குட்டியர்,
நல்ல தொகுப்பு.
காசியானந்தன் அமிர்தகழியைச் சேர்ந்தவர். ஆமாம், பாலுமகேந்திராவும் அதே.
புதுவை புத்தூரைக்குறிப்பதே.
மணலாறு விஜயனை ஓர் எழுத்தாளர் என்ற வகைக்குள் அடக்கலாம்.
அதேபோல் வவுனியா திலீபன் என்றும் ஒருவருண்டு.
முல்லை கமல் என்றொரு கவிஞரும் வன்னியில் உள்ளார்.
மேலும் முல்லை கோணேஸ் (தற்போது புலத்தில்?) உள்ளார்.
நாடக ஆசிரியர் முல்லைமணியினதும் இடத்துடன் சேர்ந்த புனைபெயரென்று நினைக்கிறேன்.

19 டிசம்பர், 2006 இரவு 22:11 வசந்தன்(Vasanthan) said...
மணலாறு விஜயனின் "வணங்காமண்" என்ற புத்தகம் முக்கியமாகக் குறிப்பிடப்படவேண்டியதொரு படைப்பு அல்லது தொகுப்பு.
19 டிசம்பர், 2006 இரவு 22:13 சின்னக்குட்டி said...
.//பத்மநாதன் தவில் வித்துவான் அல்ல. நாதஸ்வர மேதை//

.வணக்கம்..வெற்றி வருகைக்கு நன்றி... ஓம் நீங்கள் சொல்வது சரி.... பிழை திருத்ததுக்கு நன்றிகள்..

19 டிசம்பர், 2006 இரவு 23:01 சின்னக்குட்டி said...
மணலாறு விஜயன் - எழுத்தாளர்
வவுனியா திலீபன் -எழுத்தாளர்
முல்லை கமல் -எழுத்தாளர்
முல்லை கோணேஸ் -எழுத்தாளர்
வணக்கம் வசந்தன்...வருகைக்கு நன்றிகள்....மேலும் விவரங்களை தந்து இந்த பதிவை மெரு கூட்டியதுக்கும் நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 23:12 டிசே தமிழன் said...
இளவாலை விஜயேந்திரன்?
திருக்கோயில் கவியுவன் ?(பெயர் சரியா, சரிநிகரில் அருமையான சிறுகதைகள் எழுதியவர்)

19 டிசம்பர், 2006 இரவு 23:37 சின்னக்குட்டி said...
இளவாலை விஜயேந்திரன் -இளவாலை - நாடக நடிகர்.. திரைபடநடிகர்....தமிழக திரைபடங்களிலும் நடித்திருக்கிறார்.... கமலின் புன்னகை மன்னன் படத்தில் பார்த்ததாக ஞாபகம்

வணக்கம்...டிசே வருகைக்கும் .மேலதிக தகவலுக்கும் நன்றிகள

19 டிசம்பர், 2006 இரவு 23:51 கானா பிரபா said...
கேரளப்பிரபலங்கள் பலர் இப்படி ஊர்ப் பெயரோடு இருப்பார்கள், நம்மூர்க்காரரையும் அணிவகுத்தது சிறப்ப

20 டிசம்பர், 2006 மதியம் 00:00 சின்னக்குட்டி said...
//கேரளப்பிரபலங்கள் பலர் இப்படி ஊர்ப் பெயரோடு இருப்பார்கள்//

வணக்கம் பிரபா... உண்மை தான்...அடூர் கோபலகிருஸ்ணன் .. அப்படி இப்படி ... என்று....

வருகைக்கும் கருத்துக்கும்...நன்றிகள

20 டிசம்பர், 2006 மதியம் 00:11 சுந்தரி said...
நன்றி சின்னக்குட்டி அவர்களே
எனக்கு A9 ஏரம்புவின் கதைகள் நன்கு பிடிக்கும். இப்பவும் வன்னியில் கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.உண்
ையில் அவர் பண்டத்தரிபப்பு பிரசாந்தன். A9 ஏரம்பு அவரின் புனைபெயராயிருக்குமோ?

20 டிசம்பர், 2006 மாலை 04:56 tamilnathy said...
நல்ல முயற்சி மற்றும் தொகுப்பு. தகவல்களுக்கு நன்றி.

20 டிசம்பர், 2006 மாலை 06:39 Kanags said...
சின்னக்குட்டி, இது மிகவும் நீண்ட பட்டியலாக வளரக்கூடியது. நல்ல முயற்சி.

இவர்களையும் சேர்த்து விடுங்கள்:

பூநகரி மரியதாஸ், கவிஞர்
திக்கவயல் தர்மு, எழுத்தாளர், பத்திரிகையாளர்
திக்குவல்லை கமால், கவிஞர்
அமிர்தகழியான், எழுத்தாளர்
நவாலியூர் சச்சிதானந்தன், எழுத்தாளர்

20 டிசம்பர், 2006 இரவு 11:14 வசந்தன்(Vasanthan) said...
ஏ-9 ஏரம்பு எண்டது ஒரு புனைபெயர்தான்.
நிற்க, கோணசக் கவிராயர் எண்ட பேரில ஒருத்தர் கவிதை எழுதினவர், ஆனா அவருக்கும் கோணமலைக்கும் ஒரு தொடர்புமில்லை.
______________________
'இளவாலை அமுது' எண்டவரையும் சேர்க்கலாம்.
எழுத்தாளர், கவிஞர்.
சுவாமி ஞானப்பிரகாசரைப் பற்றின வாழ்க்கை வரலாற்றை எழுதித் தந்தவர்.
கவிஞர் 'வேலணை வேணியனை'யும் (தற்போது மேலக மக்கள் முன்னணிப் பிரமுகர்) சேர்க்கலாம்.

20 டிசம்பர், 2006 இரவு 11:18 சின்னக்குட்டி said...
வணக்கம் தமிழ் நதி.... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள

20 டிசம்பர், 2006 மதியம் 12:01 சின்னக்குட்டி said...
வணக்கம்...கனக்ஸ்.. அவர்கட்கு.... உங்கள் வருகைக்கும்... மேலதிக தகவலுக்கு நன்றிகள்..

சந்திரவதனா,வசந்தன், டிசே,கனக்ஸ்... தந்த மேலதிக தகவல்களை... இந்த பதிவின் உள்ளடகத்திலை சேர்த்து விட்டேன்..
20 டிசம்பர், 2006 மதியம் 12:08 டிசே தமிழன் said...
சின்னக்குட்டி நீங்கள் குறிப்பிடுவது சிலோன் விஜயேந்திரன் என்று நினைக்கின்றேன். திரைப்பட நடிகர்;தமிழ்நாட்டில் நீண்டகாலம் வசித்தவர். ஏதோ ஒரு தீ விபத்தில் அவர் இறந்துபோனதாயும் நினைவு.
.....
நான் குறிப்பிடுவது கவிஞர் இளவாலை விஜயேந்திரன். அருமையான கவிதைகள் எழுதுபவர். 'நிறமற்றுப்போன கனவுகள்' அவரது கவிதைத் தொகுப்பின் பெயர். தற்சமயம் நோர்வேயில் வசிக்கின்றார்.

20 டிசம்பர், 2006 இரவு 15:47 சின்னக்குட்டி said...
//சின்னக்குட்டி நீங்கள் குறிப்பிடுவது சிலோன் விஜயேந்திரன் என்று நினைக்கின்றேன். திரைப்பட நடிகர்//

வணக்கம்...டிசே...நீங்கள் நினைப்பது போல் சிலோன் விஜேந்திரனையே இவர் என நினைத்து விட்டேன்.

.
தவறை உடனடியாக சுட்டிக்காட்டி.. மேலதிக தகவல்களை வழங்கியதுக்கு நன்றிகள்....பதிவில் திருத்தி விடுகிறேன்
.

20 டிசம்பர், 2006 இரவு 18:12 கொழுவி said...
கோணேச கவிராயர் என்ற பெயரில் எழுதியவர் புதுவை இரத்தின துரை.

உயிரில் தீ மூட்டி உணர்வுகளின் நெய்யுற்றி
அயலை ஒளியுட்டும் அகல்.

இது என்ர நினைவில் நின்ற கொணேச கவிராயரின் கவித்துளி.

கொழும்பு கொழுவ

20 டிசம்பர், 2006 இரவு 19:14 சின்னக்குட்டி said...
நன்றிகள்...கொழுவி. மேலதிக தகவலுக்கு

//கொழும்பு கொழுவி

ஹாஹா..இந்த பெயரை சேர்க்கமாலா .. இல்லையா... என்று மத்தியகுழு கூடி விரைவில் முடிவெடுக்கும

20 டிசம்பர், 2006 இரவு 19:30 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
எனது ஊரைப் பற்றிக் குறிப்பிடாமல் இருட்டடிப்புச் செய்ததை வன்மையகக் கண்டிக்கிறேன். சும்மா சொன்னனான். கோவிக்காதைங்கோ.

எனது ஊரைச் சேர்ந்த பல அறிஞர்கள் பல நூல்களைத் தந்துள்ளார்கள். குறிப்பாக ஐரோப்பியர்களின் கால கட்டத்தில்.

மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.

20 டிசம்பர், 2006 இரவு 19:39 சின்னக்குட்டி said...
மாதகல் மயில்வாகனப் புலவர்:- இவர் ஒல்லாந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில் யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூலைத் தந்தவர்.// - மாதகல்வணக்கம்...வெற்றி.. யாழ்ப்பாண வைபமாலையில்...தான் டச்சுக்காரர் அறிமுகபடுத்திய குடாநாட்டுக்கே பிரத்தியகமாக இருந்த தேச வழமைப்பு சட்டத்தையும்... அப்போதிருந்த குடாநாட்டு சாதி அமைப்பு முறையையும் பற்றி விபரமாக இருக்கிறத

20 டிசம்பர், 2006 இரவு 19:50 மலைநாடான் said...
அடடா! சின்னக்குட்டி! என்னப்பா ஒருநாள் உந்தப் பக்கம் எட்டிப்பாக்கேல்ல, அதுக்குள்ள அந்தமாதிரி வெளுத்துக்கட்டுறீர்.
சரி சி எனர பங்குக்கு

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர்
கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்
யாழ் சீலன் - இசைக்கலைஞர்
யாழ் ரமணன் - இசைக்கலைஞர்
நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர்
அனலை(தீவு) ஆறு இராஜேந்திரம் - எழுத்தாளர்
(திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.
கல்லாறு சதீஸ் - எழுத்தாளர்
வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்
தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்
நிலா(வெளி) தமிழின் தாசன் -
கவிஞர்
வவுனியன் - கவிஞர

20 டிசம்பர், 2006 இரவு 20:25 சின்னக்குட்டி said...

இணுவில் வீரமணிஐயர் - பல்துறைக்கலைஞர்

கோண்டாவில் பாலகிருஸ்ணன் - நாதஸ்வரக்கலைஞர்

யாழ் சீலன் - இசைக்கலைஞர்

யாழ் ரமணன் - இசைக்கலைஞர்

நாச்சிமார்கோவிலடி இராஜன்- வில்லிசைக்கலைஞர்

அனலை(தீவு) ஆறு இராஜேந்திரம் - எழுத்தாளர்
(
திருக்)கோவிலூர் செல்வராஜன் எழுத்தாளர்.
கல்லாறு சதீஸ் - எழுத்தாளர்

வரணியூரான் எஸ். எஸ். கணேசபிள்ளை - நாடகக்கலைஞர்

தாமரைத்தீவான் இராஜேந்திரம் - கவிஞர்

நிலா(வெளி) தமிழின் தாசன் -
கவிஞர்
வவுனியன் - கவிஞர்
வணக்கம் மலைநாடன்... நீங்கள் வந்தால்... ஆரவாராமாய் ஒரு வெடி கொழுத்தலோடு பெயர்களை கொண்டு வருவீர்கள் என்று தெரியும்....நீங்கள் தந்த பெயர்களில் வரணியூரனின் பெயர் ஏற்கனவே சேர்த்திருக்கிறேன்.
..மிக்க நன்றிகள்...பதிவின் உள்ளடகத்தில் சேர்த்து விடுகிறேன்..

மண்டூர் மகேந்திரன் என்ற எழுத்தாளர் ஒருவர் இருந்தாக ஞாபகம்.... உங்களுக்கு ஞாபகமிருக்க


20 டிசம்பர், 2006 இரவு 20:39 மலைநாடான் said...
சின்னக்குட்டி!

மிகுந்தஆர்வத்துடன் நீங்கள் முன்னெடுத்திருக்கும் நல்ல முயற்சி. சிரமம் பாராது அகரவரிசையில் பெயர்களைத் தோகுத்துப் போடுங்கள். பிரயோசனமாகவிருக்கும். தவறவிட்ட பெயர்களை யோசிக்கவும் சுலபமாக இருக்கும்.

புலவர் ஈழத்துச் சிவானந்தன் இந்த ஒழுங்கில் சேர்க்க முடியுமா? மத்தியகுழுவிடம் கேளுங்கள்.

மண்டுர் மகேந்திரன் ஞாபகம் இல்லை.

தம்பலகாம் க.வேலாயுதம் -எழுத்தாளர் பத்திரிகையாளர்

ஞாபகம் வந்தால் பின்பு எழுதுகின்றேன்
நன்ற

20 டிசம்பர், 2006 இரவு 20:50 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
எங்கை யோகன் அண்ணையைக் காணேலை? அவரும் மலைநாடான் மாதிரி இலங்கை முழுக்க அடிபட்ட காய், தெரியும் தானே! இருந்து பாருங்கோ, அவரும் நல்ல ஒரு பட்டியலோடை வருவர்.

20 டிசம்பர், 2006 இரவு 20:59 சின்னக்குட்டி said...
//சின்னக்குட்டி அண்ணை,
எங்கை யோகன் அண்ணையைக் காணேலை//

வெற்றி.... நானும் தான் தேடறன்....யோகரை...... காண கிடைக்கலை...

யோகர் ...புளக்கர் பீற்றாவுக்கு கொடுத்த கரைச்சலில்... புளக்கரே.. பீற்றாவே வேண்டாம் என்று புது பதிவுக்கு போட்டுது என்ற செய்தி கேள்விபட்டனீங்களே..

யோகன்..பகிடிக்கு கண்டுக்காதையுங்க..

மலை நாடன் மேலதிக தகவலுக்கும்.. ஆலோசனைக்கும் நன்றி...நேரம் கிடைக்கும் போது மறு சீரமைக்கிறேன

20 டிசம்பர், 2006 இரவு 21:50 சுந்தரி said...
சின்னக்குட்டி, வெற்றி
மாதகல் மயில்வாகனப் புலவரும் நல்லூர் சின்னத்தப்பிப் புலவரும் ஏக காலத்துப் புலவர்கள்.கல்வளை அந்தாதி பறாளாய் விநாயர் பள்ளு இயற்றியவர் சின்னத்தம்பிப் புலவர்.

20 டிசம்பர், 2006 இரவு 23:23 சின்னக்குட்டி said...
//மாதகல் மயில்வாகனப் புலவரும் நல்லூர்
சின்னத்தப்பிப் புலவரும் ஏக காலத்துப் புலவர்கள்.கல்வளை அந்தாதி பறாளாய் விநாயர் பள்ளு இயற்றியவர் சின்னத்தம்பிப் புலவர்//


சுந்தரி...தகவல்களுக்கு நன்றிகள
20 டிசம்பர், 2006 இரவு 23:27 விருபா / Viruba said...
சேனையூர் அ.அச்சுதன்
கல்லாறு சதீஷ்
வண்ணை தெய்வம்
அம்பலவன் புவனேந்திரன்
தீவகன்
நோர்வே நக்கீரனார்
வேலணையூர் பொன்னண்ணா
ஈழமுருகதாசன்
பருத்தியூர் பால வயிரவநாதன்
மணி இளவாலை அமுது
மட்டுவில் ஞானகுமாரன்
பாடுமீன் சு.ஸ்ரீகந்தராசா

என்ன தாமதமாக வந்துவிட்டேனா?

21 டிசம்பர், 2006 மதியம் 01:57 Anonymous said...
சின்னக்குட்டியர்!
ஆனானப்பட்ட கொம்பியூட்டர் இஞ்சினியர்மாரெல்லாம் முழிபிதுங்கிவிட்டினம்!! இந்த கொம்யூட்டர் என்று சரியா எழுதக் கூடத் தெரியாத ;நான் எம்மாத்திரம்....ஆனால் முணந்து பிடிச்சுட்டியள் போல கிடக்கு!!!நீங்க நினைக்குமாப் போல யோசினையொண்டு கிடக்குத்தான்..;;
அது கிடக்கட்டும்..;;இதை ஊர்ப் பெயரையும் ஒட்டிக் கொண்டவர்களுடையதை மாத்திரமெடுத்தால் பெரும் பகுதி சொல்லியாச்சு!!ஆனால் சில பிரபலங்களை சொன்னவுடன் ;அவர்கள் ஊர்ப் பெயர் ஞாபகம் வரும்.
நானும் ஒரு சின்னப் பட்டியல் தாறன்!!!
சாவகச்சேரி- பஞ்சாபிஷேகன் - பழம் பெரும் நாதஸ்வரக் கலைஞர்
நாச்சிமார் கோவிலடி -கணேசன் -தவில் வித்துவான் (வாக்கன் கணேசன் செல்லப்பெயர்)
புங்குடுதீவு-பொன் சுந்தரலிங்கம்- இசைக் கலைஞர்
சாவகச்சேரி-வி.என்.நவரெத்தினம்- அரசியல்வாதி
வட்டுக் கோட்டை-நல்லதம்பிப் புலவர்- கவிதை
ஒட்டகப்புலம்-பலர்-முறிவு நெரிவு வைத்தியம்
கொக்குவில்- இரகுநாதையர்- பதிப்பாசிரியர் பஞ்சாங்கம்
தெல்லிப்பளை- தங்கம்மா அப்பாக்குட்டி-தமிழறிஞர்
காங்கேசந்துறை-வி.வி.வைரமுத்து-தமிழ்ப் புராண இதிகாச நாடகத்தில் ஈழத்தில் முடிசூடாமன்னன்.
ஊர்காவற்றுறை- காவலூர் ஜெகநாதன் -எழுத்தாளர்
நயினாதீவு-கைலாசநாதக் குருக்கள்- சைவ ஆகம கிரிகா சிரோன்மணி
அல்லப்பிட்டி- சோபா சக்தி- எழுத்தாளர்
புதுக்குடியிருப்பு-மற்றாஸ் மெயில்- சிறந்த நாட்டுப்புறப் பாடல் தொகுப்பாளர்;எழுத்தாளர்
யாழ்ப்பாணம் -தனிநாயகம் அடிகள்- தமிழறிஞர்;மதகுரு
யாழ்ப்பாணம் -தெட்சணாமூர்த்தி- உலகத் தவில் மாமேதை;;;;அளவெட்டி என ஆரம்பத்தில் குறிப்பிட்டபோதும்; புகழால்..;பின் தென்னிந்தியப் பத்திரிகைகள் "யாழ்ப்பாணம்" எனும் அடை மொழியே!
கொடுத்தது.
ஆரியகுளம்-பொன்ராசா- யாழ்ப்பானத்தில் பிரபல வாகனப் பயிற்சியாளர்.
இன்னும் பலர் புகழுடன் இருக்கலாம். இங்கே ஊர்ப்பேர்ப் புகழுடன் "வாழ்ந்த சண்டியர்களையும்;வாழும் சண்டியர்களையும்" தவிர்த்துள்ளேன்.அவர்களும் ஊருக்கு கியாதி சேர்த்தவர்கள் தான்!!!!
இங்கே!!சிலர் கொடுத்திருக்கும் வரிசை எனக்கு அடக்கமுடியாத சிரிப்பை வரவழைத்தது; அகதியா!!!புறப்பட்ட பின் பலர்;எழுத்தாளர் ரூபமெடுத்து; ஊர்பெயரையும் ஒட்டி;;;;பத்திரிகையில் வேலை செய்யும் சொந்தக்காரர் செல்வாக்கைப் பயன்படுத்தி;பவனிவரும் செய்திகளும் காதில் விழுகிறது.
அந்த நாளில் இலங்கை வானொலியிலும் இப்படி!!!ஒரு விளையாட்டிருந்தது.
நம் நாட்டுப் பத்திரிகைகள் இன்னும் வெளிநாடெனில் மெய்சிலிற்கின்றன;அந்தப் பாதிப்பு எனவே யோசிக்கவும்.
ஆசை ஆரை விட்டது.
ஏதோ நடக்கட்டும்.
யோகன் பாரிஸ்
தயவுசெய்து "ஊர்காவற்றுறை" என மாற்றவும்.

21 டிசம்பர், 2006 இரவு 13:58 பகீ said...
நல்ல தகவல்கள் நன்றி சின்னக்குட்டியாரே.

ஊரோடி பக

21 டிசம்பர், 2006 இரவு 15:29 Kulakaddan said...
Maravanpulavu sachchithanatham .....
ivaroda peyar paddiyalil irukkaa??

21 டிசம்பர், 2006 இரவு 15:52 வெற்றி said...
யோகன் அண்ணை,

/* ஆரியகுளம்-பொன்ராசா- யாழ்ப்பானத்தில் பிரபல வாகனப் பயிற்சியாளர். */

உண்மையாத்தான் சொல்லுறீங்களோ?உண்மையாத்தான் சொல்லுறீங்களோ?
முந்தி, யாழ்ப்பாணத்திலை இவர் பெரிய சண்டியன் எண்டு என்ர கூட்டாளியள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவரை வைச்சு கன பகிடிக் கதையளும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
21 டிசம்பர், 2006 இரவு 17:34 சின்னக்குட்டி said...
வணக்கம்..விருபா..வருகைக்கும்...
ேலதிக தகவலுக்கும்.நன்றிகள்....காலக் கிரமத்தில் பதிவின் உள்ளடத்தில் சேர்த்து விடுகிறேன
21 டிசம்பர், 2006 இரவு 17:45 சின்னக்குட்டி said...
//யோகன் பாரிஸ்
தயவுசெய்து "ஊர்காவற்றுறை" என //


வணக்கம்... காவலூர் யோகன்(யோகன்-பாரிஸ்).. அவர்களே.... வெற்றி சொன்ன மாதிரி நிறைய விசயங்களோடு தான் வந்திருககிறீர்கள்...மிக்க நன்றிகள்....காலகிரமத்தில் பதிவின் உள்ளடக்கத்தில் சேர்த்து விடுகிறேன்மாற்றவும்//

21 டிசம்பர், 2006 இரவு 17:51 சின்னக்குட்டி said...
வணக்கம் பகீ.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

வணக்கம் குளக்காடன்..வருகைக்கு நன்றி... மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களின் பெயர் ஏற்கனவே பதிவின் உள்ளடகத்தில் சேர்த்திருக்கிறேன்... அத்துடன் அவர் சக வலைபதிவரும் கூடவே...

21 டிசம்பர், 2006 இரவு 17:57 Anonymous said...
வெற்றி!
அந்த நாட்களில் கார் பயிற்சி தேவைப்பட்டவர்களுக்கு(எனக்கல
ல)அவர் அதைச் செய்து பிரபலம்.நீங்கள் குறிப்பிடும் விடயமும் இருந்ததுதான்....சிலரிடம் உள்ள திறமைகளை விடக் குறைகளே!!வெளியே தெரிவது கூட....இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.
யோகன் பாரிஸ்
சின்னக்குட்டியர்!
கல்லடி வேலரை மறந்து விட்டேன்."சுத்த தமிழுக்கு முட்டி மோதியவர்" கட்டாயம் போடவும

21 டிசம்பர், 2006 இரவு 17:57 வெற்றி said...
சின்னக்குட்டி அண்ணை,
இப் பதிவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவு போன்றது. எனவே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இப் பிரபலங்களின் பெயர்களையும் ஊரையும் alphabetical ஒழுங்கிலும், அத்தோடு அவர்களின் துறைகளையும் பிரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக, எழுத்தாளர்கள் ஒரு பிரிவு, கவிஞர்கள் இன்னுமொரு பிரிவு etc.,
நன்றி.

21 டிசம்பர், 2006 இரவு 17:58 சின்னக்குட்டி said...
//மிகுந்தஆர்வத்துடன் நீங்கள் முன்னெடுத்திருக்கும் நல்ல முயற்சி. சிரமம் பாராது அகரவரிசையில் பெயர்களைத் தோகுத்துப் போடுங்கள். பிரயோசனமாகவிருக்கும். தவறவிட்ட பெயர்களை யோசிக்கவும் சுலபமாக இருக்கும்//

//இப் பதிவு ஈழத்தின் வரலாற்றுப் பதிவு போன்றது. எனவே, உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது, இப் பிரபலங்களின் பெயர்களையும் ஊரையும் alphabetical ஒழுங்கிலும், அத்தோடு அவர்களின் துறைகளையும் பிரித்துப் போட்டால் நன்றாக இருக்கும். எடுத்துக்காட்டாக, எழுத்தாளர்கள் ஒரு பிரிவு, கவிஞர்கள் இன்னுமொரு பிரிவு etc.,
நன்றி. //

வணக்கம் நண்பர்களே.... இந்த பதிவை யாரும் ஒழுங்கபடுத்தி தங்கள் மீள் பதிவாக பிரசுரிக்க வந்தீர்களென்றால் நன்றியுடையவனாய் இருப்பேன்...... இந்த பதிவின் சேகரிப்பும் கனமும் முக்கியத்துவம் விளங்கியபடியாலே தான் கேட்கிறேன்...

எனது கமபியூட்டர் அறிவு குருடன் பெண்டிலுக்கு அடிச்சமாதிரி தான். யாரும் அநுபவம் வந்தவர்கள் முன் வந்தால் சரியான வடிவமைப்பில் வரும் என்ற நம்பிக்கையில் கேட்கிறன

21 டிசம்பர், 2006 இரவு 18:31 வெற்றி said...
என்ன சின்னக்குட்டி அண்ணை,
பின்னூட்டங்கள் 49 தோட நிக்குது. இந்தாங்கோ 50 வது பின்னூட்டம்.!!!

/* இந்த பதிவை யாரும் ஒழுங்கபடுத்தி தங்கள் மீள் பதிவாக பிரசுரிக்க வந்தீர்களென்றால் நன்றியுடையவனாய் இருப்பேன்...*/

நானும் இதை வழிமொழிகிறேன்.

கனக்ஸ் ஸ்ரீறீதரன்
மலைநாடான்
கானா பிரபா
மதி கந்தசாமி
வசந்தன்
ஈழநாதன்
பகீ

இவர்களில் யாராவது ஒருவரோ அல்லது சிலர் சேர்ந்து கூட்டு முயற்சியாகவோ செய்யலாம். மேற்குறிப்பிட்ட பதிவர்கள் மனசு வைச்சால் செய்யலாம். செய்வினமோ?
21 டிசம்பர், 2006 இரவு 19:09 மலைநாடான் said...
//மேற்குறிப்பிட்ட பதிவர்கள் மனசு வைச்சால் செய்யலாம். செய்வினமோ?//

வெற்றி!
என்ன இப்பிடிக் கேட்டுப் போட்டடீர். இணையத்தில் இணைந்த எங்கள் எல்லோரிடமும், அரட்டை அடித்ததாக இருக்கக் கூடாது அதற்கும் மேலாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இணைந்தே இருக்கிறது. என்ன புலத்தில் நேரம்தான் ஒரு பெரும் பிரச்சினை.
சின்னக்குட்டி ஒரு வரலாற்றுத்தகவல் பதிவுக்கு அடியிட்டிருக்கிறார்.
இதைச் சற்றுக்கவனமெடுத்து வடிவாகவும், ஒழுங்காகவும், செய்து ஒரு ஆவணமாக அமைப்பது நல்லது. யாரும் செய்வதாக இல்லாவிடின் நான் இதனைச் செய்கின்றேன்.ஆனால் சற்றுக்கால அவகாசம் தேவை. அதுவரைக்கும், விடுபட்டிருப்பவர்களின் பெயர்கள் இருப்பின் (நிச்சயமாக இருக்கும்)இணைத்துக் கொண்டே இருக்கலாம். அல்லது வேறு யாராவது செய்வதாயின் உதவிசெய்கின்றேன்.

இதுகுறித்து ஏனைய நண்பர்களின் கருத்தையும் தெரிவியுங்கள்.

வெற்றி!
அதுசரி, நீர் இப்பிடிக்கதைவிட்டிட்டு எங்க மாறப்பாக்கிறீர். ஏன் நீரும் முயற்சிக்கலாம்தானே?
21 டிசம்பர், 2006 இரவு 22:22 வசந்தன்(Vasanthan) said...
வீரமணி ஐயர் ஊர்ப்பெயரோடு பரவலாக அறியப்பட்டவரல்லரென்று நினைக்கிறேன். தனியே வீரமணி ஐயர் என்றுதான் (சிலவேளை ஒரு பட்டத்தோடு) அவரது பெயர் இடம்பெற்றுப் பார்த்ததுண்டு.
'ஈழத்து' என்ற அடைமொழி இந்தத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்பில்லையென்றே படுகிறது.
அத்தோடு 'நோர்வே' நக்கீரனும் இத்தொகுப்பில் இடம்பெறச் சாத்தியமுண்டா?

வெற்றி, உம்மட ஊர்க்காரர் ரெண்டொரு பேரின்ர பேர்கள் ஊர்ப்பெயரோட நாட்டுக்கூத்து வரலாற்றில் வருது. அதில மயில்வாகனத்தாரும் ஒராளெண்டு நினைக்கிறன். யாழ்ப்பாணத் திருமறைக்கலாமன்றத்தாரின்ர கலைக்கண்காட்சியிலயோ எங்கயோ நாட்டுக்கூத்து இயற்றியவர்கள் என்ற நீண்ட பட்டியலில் பார்த்த ஞாபகம்.

வீரமணி ஐயர் ஊர்ப்பெயரோடு பரவலாக அறியப்பட்டவரல்லரென்று நினைக்கிறேன். தனியே வீரமணி ஐயர் என்றுதான் (சிலவேளை ஒரு பட்டத்தோடு) அவரது பெயர் இடம்பெற்றுப் பார்த்ததுண்டு.
'ஈழத்து' என்ற அடைமொழி இந்தத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்பில்லையென்றே படுகிறது.
அத்தோடு 'நோர்வே' நக்கீரனும் இத்தொகுப்பில் இடம்பெறச் சாத்தியமுண்டா?

வெற்றி, உம்மட ஊர்க்காரர் ரெண்டொரு பேரின்ர பேர்கள் ஊர்ப்பெயரோட நாட்டுக்கூத்து வரலாற்றில் வருது. அதில மயில்வாகனத்தாரும் ஒராளெண்டு நினைக்கிறன். யாழ்ப்பாணத் திருமறைக்கலாமன்றத்தாரின்ர கலைக்கண்காட்சியிலயோ எங்கயோ நாட்டுக்கூத்து இயற்றியவர்கள் என்ற நீண்ட பட்டியலில் பார்த்த ஞாபகம்.

கொழும்பு கொழுவி,
எங்களுக்குத் தெரியாமலோ புதுவையைச் சொல்லாமல் விட்டனாங்கள்?

22 டிசம்பர், 2006 மதியம் 00:30 Anonymous said...
நீலவாணன்
திருமலை நவம்
ஆவரங்கால் ஸ்ரீனிவாஸையும் சேர்க்கலாமோ?
மலைநாடான் மாதிரி சாரல்நாடான் ;-)

22 டிசம்பர், 2006 மதியம் 00:49 விருபா / Viruba said...
ஈழ இலக்கியங்கள் தொடர்பான ஆர்வலர்கள் அனைவருக்கும் இந்த இடத்தில் ஒரு நற்செய்தியை தெரிவிக்க விரும்புகிறேன்.

விருபா என்பது பௌதீக எல்லைகள் இன்றி அனைத்து தமிழ்ப் புத்தகங்கள்/தமிழ் எழுத்தாளர்கள்/பதிப்பகங்கள்/இதழ்கள்/சிற்றிதழ்கள் என்று அனைத்தையும் பட்டியலிடும் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

எமது தளத்தைப் பார்த்து அதே போன்று தனியாக ஈழத்து நூல்களையும், கலை, இலக்கிய நிகழ்வுகளையும் ஒரே இடத்தில் பட்டியலிடக்கூடியவாறு தனியான ஒரு செயலியை உருவாக்கித் தரும்படி நோர்வேயில் வசித்துவரும் தமிழியம் என்ற இணையதளத்தினை இயக்கிக்கொண்டிருக்கும் சுபாஸ் மற்றும் உதயன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நாம் புதிய ஒரு செயலியை, முற்றிலும் தமிழிலியே இயங்கவல்ல இடைமுகத்துடன்கூடிய செயலியை உருவாக்கியுள்ளோம். இதில் ஈழத்தை தாயகமாகக் கொண்ட எழுத்தாளர்கள், கலைஞர்கள் படைப்புக்கள் பட்டியலிடப்படும்.

இச்செயலியானது www.eelambooks.com என்ற தளத்தில் தை மாதம் முதல் இயங்கவுள்ளது. இதில் ஆர்வமுள்ளவர்கள் பலரும் ஈழ நூல்கள் பற்றிய தகவல்களையும் மதிப்பீடுகளையும் உள்ளிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ் இணைய தளத்தில் நூல்களை இணைப்பதற்கு தமிழில் இணையப் பயன்பாடு தெரிந்திருத்தல் அவசியம் என்பதால் ஒரு வலைப்பதிவை அல்லது இணையதளத்தை நிர்வகிப்பவர்கள் உடனடியாக உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவார்கள
. ஒவ்வொரு நாட்டிலும் இருந்தும் இருவரை அல்லது மூவரை சேர்த்துக்கொள்வதாக உள்ளார்கள்.

விரும்புகிறவர்கள் tamiliam@eelambooks.com என்ற முகவரிக்கு தமிழில் தொடர்பு கொள்ளவும். ஏற்றுக்கொள்ளப்படும் உறுப்பினர்களுக்கு உங்கள்பெயர்@eelambooks.com என்ற மின்-அஞ்சல் முகவரி http://mail.google.c.../eelambooks.com என்ற தளத்திலிருந்து தரப்படும். உறுப்பினர்களின் தரமான பங்களிப்பிற்கேற்ப அவர்களுடைய வலைப்பதிவை http://eelambooks.com/blog/உங்கள்பெயர் என்ற முகவரிக்கும் பிற்காலத்தில் மாற்றிக்கொள்ளவும் அனுமதிக்கும் எண்ணமுண்டு. நாம் சில ஈழத் தமிழ் இலக்கிய ஆர்வமுள்ள வலைப்புதிவாளர்களைப் பரிந்துரைத்துள்ளேன், முடிவு அவர்கள் கையில். எனவே ஆர்வமுள்ளவர்கள் உங்களின் விபரங்களுடன் நேரடியாக தமிழில் தொடர்பு கொள்வது நல்லது.
22 டிசம்பர், 2006 மதியம் 02:17 வெற்றி said...
மலைநாடான் ஐயா,
வணக்கம்.

/* இணையத்தில் இணைந்த எங்கள் எல்லோரிடமும், அரட்டை அடித்ததாக இருக்கக் கூடாது அதற்கும் மேலாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இணைந்தே இருக்கிறது. என்ன புலத்தில் நேரம்தான் ஒரு பெரும் பிரச்சினை.
சின்னக்குட்டி ஒரு வரலாற்றுத்தகவல் பதிவுக்கு அடியிட்டிருக்கிறார். */

உண்மை. நான் உங்கட கருத்தோட 100% உடன்படுகிறேன்.

/* வெற்றி!
அதுசரி, நீர் இப்பிடிக்கதைவிட்டிட்டு எங்க மாறப்பாக்கிறீர். ஏன் நீரும் முயற்சிக்கலாம்தானே? */

எனக்குச் செய்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனக்கு ஈழத்தின் ஒரு சில தவில்/நாதஸ்வரக் கலைஞர்களைத் தவிர வேறொருவரையும் தெரியாது. முந்தநாள் மறைந்த ஈழத்தின் பழம்பெரும் எழுத்தாளர் அமரர் வரதர் ஐயா அவர்களைப் பற்றியே சில வாரங்களுக்கு முன்னர் பகீயின் பதிவின் மூலம் தான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் மேலே குறிப்பிட்டவர்கள் ஈழத்தின் எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்றவர்களைப் பற்றிய பரீட்சயம் நிறைய உள்ளவர்கள். அதனால் தான் அவர்கள் செய்வது நல்லது என்று சொன்னேன். மற்றும்படி அவர்களுக்கு ஏதாவது உதவி, ஒத்தாசைகள் தேவையெண்டால் நான் உதவி செய்யத் தயார்.

மிக்க நன்றி.
22 டிசம்பர், 2006 மாலை 06:12 கொழுவி said...
செல்வா சுக்
சிட்னி சின்னப்பு
ஒஸ்ரேலியா வசந்தன

22 டிசம்பர், 2006 மாலை 07:29 கானா பிரபா said...
கொழும்பான் கொழுவ

22 டிசம்பர், 2006 இரவு 08:02 கொழுவி said...
கானா என்ற ஒரு நாடு இருக்கிறது கானா பிரப

22 டிசம்பர், 2006 இரவு 08:11 கொழுவி said...
கொழும்பு கொழுவி என்பதை ஏற்கனவே சொல்லி விட்டேன். அது மத்திய குழு பரிசீலனையில் உள்ளதாம். நீங்கள் மனது வைத்தால் பட்டியலில் இடம் பெறும்..

22 டிசம்பர், 2006 இரவு 08:13 மலைநாடான் said...
//வீரமணி ஐயர் ஊர்ப்பெயரோடு பரவலாக அறியப்பட்டவரல்லரென்று நினைக்கிறேன்//

'ஈழத்து' என்ற அடைமொழி இந்தத் தொகுப்பில் இடம்பெற வாய்ப்பில்லையென்றே படுகிறது.
அத்தோடு 'நோர்வே' நக்கீரனும் இத்தொகுப்பில் இடம்பெறச் சாத்தியமுண்டா//

இவை நியாயமான கூற்றுக்களாகவே நானும்உணர்கின்றேன்.


//மலைநாடான் மாதிரி சாரல்நாடான் //

)

விரூபாவின் அறிவுறுத்தலை முழுமனத்துடன் ஏற்றுக் கொள்கின்றேன். உதவி தேவைப்படும்போது முடிந்தவரை உதவுகின்றேன்.

வெற்றி!
உந்த ஐயா போடுவதை விடமாட்டீரோ?
நன்றி!

No comments: