Pages

வாசகர் வட்டம்

Friday, April 29, 2011

அரச குடும்ப திருமணம் -குதூகலத்தில் நம்மவர்கள்

 இன்று பிரிட்டனில் எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள் ஏனெனில் பொதுவிடுமுறை.பொதுவிடுமுறையின் காரணம் என்னவெனில் இன்று பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசுக்கு திருமணமாம்.இன்று நடைபெறும் இதே தேவாலயத்தில் தான் கொஞ்ச காலங்கள் முன்னதாக இந்த வாரிசு தாயாரின் உடலை வைத்திருத்த போது செய்வதறியமால் கண்ணீர் விட்ட காட்சி என் கண் முன் நிற்கிறது. பிரான்சில் கார் விபத்தில் தாய் இறந்ததாக கூறினாலும் ஏதோ சதியோ என் கேள்வி குறியாக இருந்தமை தான் காரணம்.இந்த அரச குடும்பத்தின் திருமணத்தை தங்கள் திருமணம் போல குதுகாலிக்கும் அரச குடும்ப விசுவாசிகளும் இதற்க்காக கோடிக்கணக்கான பணச் செலவு செய்வது வேறு காரணங்களுக்காகவும் எதிர்க்கும் ஒரு பகுதியினருமாக இத்திருமணத்தை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாரிசின் தாயார் தகப்பனாரும் திருமணத்துக்கு பின் முட்டி கொண்டு அதன் பின் நடந்த விபீரிதம் யாவரும் அறிந்ததே. இந்த வாரிசுவும் காதலியும் திருமணத்துக்கு முன்பே முட்டி மோதிய கதை கட்டுரைகள் பத்திரிகைகளில் படங்களுடன் வெளியாகி இருந்தன. இப்போழுது ஒருவாறு திருமணத்துடன் முடிந்து விட்டன வாழ்த்துக்கள் .இன்றைய மணமகள் சிறிது காலத்துக்கு முன்பு சாதாரண தரிப்பிட பரிசோதக தொழிலாளியுடன் முட்டி மோதிய கதைகளும் உண்டு.தரிப்பிட பரிசோதகரிடம் இன்றைய மணமகள் தான் இந்த நாட்டு முடி வாரிசின் காதலி நான் என சொன்ன் திமிரும் . நீ யாராய் இருந்தால் எனக்கென்ன என்னுடைய தொழில் இது. இந்தா உனது தண்ட பணத்துக்குரிய பற்றுச்சீட்டு சொன்ன அந்த தொழிலாளியின் தைரியுமும் இந்த சந்தர்பத்தில் ஞாபகத்துக்கு வருகிறது.

மூன்றாம் உலக நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமல்ல இந்த அறியாமையில் மூழ்கி இருப்பது ஏதோ வகையில் வளர்ந்திருக்கின்ற சொல்லப் படுகின்ற இந்த நாட்டிலும் இருக்கிறது. அரச குடும்ப திருமணத்தை தன் வீட்டு திருமணமாக பூரித்து ஒரு பொய்யான மகிழ்வில் மூழ்வதன் மூலம் தங்களிடமும் நிறைய அறியாமை இருக்கிறது என வெளிச்சம் காட்டி கொள்ளுகிறார்கள்.இவர்களுடன் இணைந்து கொள்ளுகிறார்கள் நம்மவர்களில் உள்ள வைற் கொலர்காரர்களும்..அவர்களின் குதுகாலிப்பே ஒரு தனி ரகம் ...அவர்களின் குதூகலிப்பை இணையத்தில் பார்த்தால் தெரியும் சந்தோசங்கள் மகிழ்ச்சிகள் பூரிப்புக்கள் கொட்டி குவிந்திருக்கிறது.

உலகம் முழுவதும் உலகத்தை ஒரு காலத்தில் ஆண்டு சுரண்டி களவெடுத்து கொழுத்து இன்று பல் விழுந்த கிழவி என்ற அடை மொழியோடு அழைப்படுகிறது இன்றைய பிரிட்டன் .கொழுத்து தினவு எடுத்த இந்த அரச பரம்பரை தனது திமிர் இன்னும் அடங்கவில்லை என அடிக்கடி இப்படியான வைபங்கள் நடக்கும் பொழுது காட்டி ஞாபக படுத்த முயற்சிக்கிறது . இந்த நாட்டில் அறியாமை மூழ்கி நிற்கும் சாதாரண மக்கள் மட்டுமல்ல. ஒரு காலத்தில் இந்த ஆண்டாருக்கு அடிமையாக இருந்து நல்ல சேவகன் என பெயர் எடுத்த நம்மவரும் இந்த குதூகலத்தில் மிகவும் முன் நிற்கிறார்கள் என்பது வருத்ததுக்குரிய செய்தி

இந்த அரச குடும்பத்துக்கு விசுவாசமாக காலம் காலமாக நம்மவர்கள் இருந்துள்ளார்கள். வரலாற்றில் பல கதைகள் உள்ளன.அவற்றில் ஒன்று ...அடங்காதமிழன் சுந்தரலிங்கம் என்ற ஒரு பழைய இலங்கை தமிழ் அரசியல்வாதி ஒருவர் இருந்தவர்.இது என்ன அடங்காதமிழன் என்றதுக்கு பின்னர் சொல்லுகிறேன். இந்த சுந்தரலிங்கம் இன்றைய பிரிட்டிஸ் மகாரணிக்கு கணித பாடம் சொல்லி கொடுத்தவராம் .இதனால் பிரிட்டிஸ் மகாராணி இலங்கைக்கு ஒரு முறை விஜயம் செய்த பொழுது தனது அரச குல திமிருடன் எல்லாருக்கும் தனது கையுறையுடன் கை குலுக்க ..இவருக்கும் மட்டும் தனது கை உறையை கழட்டிய பின்னர் கை கொடுத்தாவாம் ,,,இந்த பெருமையை தங்களுக்கே தந்ததாக பெருமை கொள்ளும் நம்மவர்கள் காலம் காலமாக சொல்லி மகிழ்ந்து தங்களையும் தங்கள் உரிமைகளையும் இழந்தார்கள்.

இந்த சுந்தரலிங்கம் மாவிட்டபுரக் கோவில் ஆலய பிரவேசத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்களில் ஒருவர்.இந்த பிரவேச பிரச்சனையில் தனக்கு எதிரான பாதகமான நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரச குடும்பத்தின் செல்வாக்கை பாவிக்க முனைந்தவர் என்ற தகவல் உண்டு .


இந்த so call நன்கு படித்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் இந்த சுந்தரலிங்கத்தை ஏன் அடங்காதமிழன் என்று அழைத்தார்கள் என்பதை இப்போழுது சொல்லி விடுகிறேன் .இலங்கை பாரளுமன்றத்தில் சபாநாயகர் இவரை வெளியேற்றிய பொழது வெளியேற மறுத்து இருந்தார் ,அவரை பாரளுமன்ற காவலர்கள் கதிரையுடன் தூக்கி கொண்டு போய் வெளியில் வைத்தார்களாம்.அத்துடன் அந்த காலம் மனோவசிய கலைகளான ஹிப்னாடிசியம் மெஸ்மரிசம் போன்றவற்றை தெரியாத காலம் ஆனால் இவர் கற்று தேர்ந்து இருக்கிறார் .அதன் உதவியுடன் பாரளுமன்றத்தில் சபாநாயகருடன் நடந்த கருத்து மோதலின் போது தனது கடைசி அஸ்திரமாக தனக்கு தெரிந்த மெஸ்மரிச கலையை பாவித்து இருந்தார் .அதனால் சபாநாயகர் மயங்கி விழுந்திருக்கிறார் ..அதனாலும் இவரின் பெருமை ஓங்கி இருக்கிறது


அன்று தொடங்கிய நம்மவர்களின் பிரிட்டிஸ் அரச விசுவாசம் இன்றும் தொடருகிறது .அந்த விசுவாசம் இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் ,அந்த பெருமைக்குரிய ஆண்டைக்கு நல்ல பெருமைக்குரிய அடிமையாக இருப்பதில் பெருமை கொள்ளுகிறார்கள் .பக்கிகாங் அரண்மனை யன்னல் கதவடியில் இந்த புதிய அரச வம்ச திருமண ஜோடி வழங்கும் பகிரங்க திருமண முத்தத்தை காண வெளியில் திரண்டு காத்திருக்கும் இந்த முட்டாள் மக்கள் கூட்டத்துடன் இவர்களும் காத்து இருக்கிறார்கள் ,அந்த முத்தத்தை கண்ட தரிசனத்தில் சந்தோசத்த்தில் தாங்கள் கொடுத்த சொந்த முத்தங்களை கூட மறந்தே போயிருப்பார்கள்.

பூரிப்பில் திகழும் இந்த பெருமைக்குரிய அரச குடும்ப விசுவாசிகளை வாழ்த்துவதோடு இந்த புதிய திருமண தம்பதிகளை எனது பங்குக்கு வாழ்த்துகிறேன் ,


பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: செலவு செய்வது யார்? என்று தெரிந்து கொள்ள இங்கே அழுத்தவும்

Thursday, April 07, 2011

கிட்டடியில் தமிழ் நாட்டில் தேர்தலாமே?


இடம் இருந்து வலமாக சாவச்சேரி நவரத்தினம் எம்பி ,தந்தை செல்வா,அமிர்தலிங்கம் நேருவும் இந்திராகாந்தியும் இலங்கை வந்த போது)


தமிழ்நாட்டு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் தருணத்தில் இந்த தமிழ்நாட்டு வர்த்தக சஞ்சிகைகள் பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களின் தாக்கங்களினால் இலங்கை தமிழர்களையும் பாதித்திருப்பது தவிர்க்க முடியாதவை தானே. சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றின் தாக்கத்தினால் தமிழ்நாட்டு அரசியலை இலங்கை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர் தமிழ்நாட்டு தமிழர் இலங்கை அரசியலை தெரிந்து வைத்திருந்ததை விட கூட என்று கூறலாம்.
70 களில் தந்தை செல்வாவின் இறுதி சடங்குக்கு எம்ஜீஆர் வருவார் என யாழ் மக்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் வந்தவர்கள் அதிமுக சார்பில் நாஞ்சில் மனோகரனும் திமுக சார்பில் ஒருவரும் வந்திருந்தார்கள் .தெல்லிப்பளை தமிழர் விடுதலை கூட்டணி அலுவலகத்துக்கு முன்னர் காரில் கறுத்த கண்ணாடியும் கையில் மந்திரக்கோலுடன் ஏற முற்பட்ட நாஞ்சில் மனேகரனை வழி மறித்த ஒரு இளைஞர் ஆசைத்தம்பி சுகமா என்று கேட்டார். இப்படியொரு கேள்வியை அதுவும் யாழ்ப்பாணத்தில் தன்னிடத்தில் செலுத்துவார்கள் என நாஞ்சில் மனேகரன் எதிர்பார்க்கவில்லை .என்றாலும் நாஞ்சில் மனோகரன் தன்னை சுதாகரித்து கொண்டு ஆசைத்தம்பியை என்ன ஆஸ்பத்திரியிலா விட்டு விட்டு வந்திருக்கிறேன் என நக்கலாக பதிலை சொல்லி சமாளித்து கொண்டார்.

இந்த இளைஞரின் கேள்வியும் இப்படியான நாஞ்சில் மனேகரனின் பதிலும் ஏன் என்பது பலருக்கு விளங்காமல் இருக்கலாம் அல்லது மறந்து இருக்கலாம். செல்வாவின் மறைவுக்கு சிறிது காலத்துக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் எம்ஜிஆரின் அலை காரணமாக 38 தொகுதிகளிலும் அதிமுக வெல்ல. அதிமுக பிரபல பிரமுகரான நாஞ்சில் மனோகரன் மிச்சமுள்ள ஒரு தொகுதியான வட சென்னையில் திமுக வேட்பாளர் ஆசைத்தம்பியிடம் தோற்றிருந்தார்.நாஞ்சில் மனேகரன் இந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழர் விடுதலை கூட்டணி வட்டாரங்களில் கூறியதாக கேள்வி. யாழ் இளைஞர்கள் நன்கு தமிழ்நாட்டு விபரங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டாராம்.அன்றல்ல இன்றும் இலங்கை தமிழர்கள் மத்தியில் தமிழ்நாட்டு தேர்தல் மற்றும் அரசியலை உற்று நோக்குவது தவிர்க்க இயலாமல் தான் இருக்கிறது.அப்போதைய இலங்கையின் உள்ளூராட்சி மந்திரியாக இருந்த தமிழரசுகட்சியை சேர்ந்த திருச்செல்வம் கருணாநிதியுடன்மிக உலக பிரசித்திபெற்ற வழக்கறிஞர் ஜிஜி பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்று சமஸ்டிக்கட்சி அல்லது தமிழரசு கட்சியை எஸ்.ஜே,வி செல்வநாயகம் ஸ்தாபித்தார் .ஜிஜி பொன்னம்பலத்தின் 50க்கு 50க்கு கோரிக்கையை நிராகரித்து சமஸ்டி கோரிக்கையை வைத்தார். அதன் தலைவர் எஸ் ஜே வி செல்வநாயகம் அவர்களின் முன்னுள்ள எஸ்.ஜே என்ற விரிவாக்கமான சாமுவேல் ஜேம்ஸ் என்ற கிறிஸ்த்தவ பெயர்கள் காரணமாக பிரச்சனைக்குள்ளானார்.

யாழ் உயர் இந்துத்துவ சிந்தனையுள்ள தமிழ் காங்கிரஸினர் இந்த விடயத்தை ஒரு ஆயுதமாக கையில் எடுத்து செல்வநாயகம் தமிழருக்கு தலைமை தாங்க தகுதி இல்லாதவர் என பிரச்சாரம் செய்தனர் .அப்பொழுது தமிழ்நாட்டில் எழும்பிய திராவிட எழுச்சி அல்லது திராவிட முன்னேற்றகழகத்தின் எழுச்சி இலங்கையில் தமிழரசு கட்சியினருக்கும் உதவியது என்பதை மறுக்க முடியாது.திராவிட முன்னேற்ற கழகத்தினரின் போராட்ட முறைகளை தாங்களும் பின்பற்றியது மட்டுமன்றி அவர்கள் மாதிரியே மேடைப்பேச்சுகளை பேசி மக்களை உசுப்பேத்தினர்.மொத்தத்தில் தமிழ்நாட்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் நகலாக இங்கு இருந்தனர் என்று சொல்லலாம்.

so call சுதந்திர இந்தியாவிற்குக்கு முற்பட்ட காலத்தில் பிரிட்டிஸாரால் உருவாக்கப்பட்ட காந்தி நேருவின் காங்கிரஸ் கட்சியிலும் பார்க்க தமிழ் நாட்டில் ஒரு காலகட்டத்தில் இடதுசாரிகள் வலுவாக இருந்தார்கள் என்று கூறுவோர்களும் உளர்.அது போல யாழிலும் உந்த தமிழரசுக்கட்சியின் எழுச்சிக்கு முன்னர் இடதுசாரிகளின் அலை இருந்தது என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள் .so call சுதந்திர இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் வடக்கில் பருத்தித்துறை தொகுதியில் கம்னீயூஸ்ட் கட்சியில் கந்தையா அமோக வெற்றி பெற்றிருந்தார் .அத்துடன் ட்ரொக்ஸிய சிந்தனை நிரம்பிய என்.எம் பெரேராவின் சமசமாஜக் கட்சிக்கும் யாழில் பல இடங்களில் மிக்க ஆதரவு இருந்திருக்கிறது என்று கூறுவோர் உளர் .

பிற்க்காலத்தில் தமிழர் கூட்டணி தலைவராக இருந்த சிவசிதம்பரம் தோழர் கந்தையாவின் அரசியல் பாசறையில் இருந்து தான் வந்தவர் என கூறுவர் உளர். இப்ப இருக்கிற ஆனந்தசங்கரி முன்னர் சமசமாஜக்கட்சியில் போட்டியிட்டவர் .இப்படி வடக்கில் இடதுசாரிகளுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்கி இருந்தாலும் பின்னர் வடே தோசை அபிட்ட எப்ப (வடை தோசை எங்களுக்கு வேண்டாம்)என்று கோசம் போட்டு தமிழருக்கு எதிராக ஊர்வலம் போனவர்கள் என்று தமிழர்கள் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டும் உண்டு.


தமிழரசுகட்சி தமிழர்விடுதலை கூட்டணியான பிறகு யாழ் முற்றவெளியில் நடந்த கூட்டத்தை பார்த்த நீயூஸ்வீக சஞ்சிகையின் நிருபர் ஒருவர் எழுதி இருந்தார் .கறுத்த கோட் போட்டு வழக்கறிஞர் தொழிலாக கொள்ளும் இந்த தமிழ் அரசியல்வாதிகள் தங்களின் வாய்ச்சவடால் பேச்சின் மூலம் தமிழ் மக்களை தங்களுக்குள் அதிசயக்க வகையில் கட்டுகுள்ளாகிறாக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டார். இந்த நிருபர் இந்த பேச்சு வழிமுறையின் அசல் சொந்தக்கரார்களான திராவிட முன்னேற்ற கழகத்தினரின் பேச்சுக்களை பார்க்கவில்லை போலும்

. 70 களில் தமிழர் கூட்டணி மேடைகளில் பிரபல மேடை பேச்சாளராக வண்ணை ஆனந்தன் என்றொருவர் இருந்தார் இவரின் பேச்சினால் பல இளைஞர்கள் கவரப்பட்டார்கள் . அதனால் முட்டாள் தனமாக உணர்ச்சி வசப்பட்டார்கள். இரத்தத்தால் நெற்றி பொட்டு இட்டார்கள்.இவரின் பேச்சு வழமையான பேச்சில் இருந்து வித்தியாசமான முறை இருந்தது என்பது உண்மை தான் . பின்னர் தான் அறியகூடியதாய் இருந்த்து. தந்தை பெரியாரின் பேச்சு ஸ்டைலை பின்பற்றியிருந்தாராம். இவர் மேடை நாகரிகமின்றி துப்பி பேசுவார் . பெரியார் இப்படி பேசினாரோ தெரியாது. வண்ணை ஆனந்தனின் பேச்சு போலத்தான் இன்று சீமான் அவர்கள் தன் பேச்சினால் இளைஞர்களின் நரம்புகளை முறுக்கேற்ற வைக்கிறார் .காலம் காலமாக உலகத்தில் தமிழன் எங்கை வாழ்ந்தாலும் உந்த உசுப்பேற்றிய பேச்சை நம்பியே ஏமாந்து போவதை வழக்கமாக கொண்டிருக்கிறான்.

இலங்கை தமிழரசுக்கட்சியினர் எப்பொழுதும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தான் விசுவாசமாகத்தான் இருந்துள்ளனர் என்று சொல்லலாம் .எம்ஜீஆர் மலையாளி என்பதால் ஒரு அவ நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம் .அதற்க்கு சில உதராணம் கூறலாம் கருணாநிதியின் ஊழல் குற்றசாட்டு காரணமாக அப்பொழுது சன்சோனி கமிசன் அமைத்திருந்தார்கள் ..பிற்கால்த்தில் தமிழர் கூட்டணியில் இணைந்திருந்த உலக பிரபல வழக்கறிஞர் ஜீஜீ பொன்னம்பலம் கருணாநிதிக்காக வழக்காட இந்தியா சென்றமை . எம்ஜீஆர் ஆட்சி காலத்தில் மதுரையில் நடந்த தமிழராய்ச்சி மகாநாடு நடைபெற்றது .அந்த காலம் திமுக என்றாலும் சரி அதிமுக என்றாலும் சரி ஈழ அரசியலை தவிர்த்து அரசியல் நடத்த முடியாத நிலைமை. அந்த தமிழாராய்ச்சி மகாநாட்டுக்கு அமிர்தலிங்கம் தமிழர் கூட்டணி தலைவர்கள் சென்று இருந்தனர்.இவர்களுக்கு வசதி அளிப்பதற்க்கு வரவேற்பதற்க்கு இரு கழகத்தவரும் போட்டி போட்டனர்.எம்ஜீஆர் இவர்களுக்கு என்று பிரத்தியேகமான கார் வசதிகள் போன்றவற்றை அளிப்பதுக்கு ஏற்கனவே ஒழுங்கு படுத்தி வைத்து இருந்தார் .ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியினர் தங்களுக்குள்ள திமுக விசுவாசம் காரணமாக திமுகவினரினர் காரில் சென்றமையால் எம்ஜீஆரை கடுப்பாகிய நிலைமையும் நடந்ததுண்டு.

இலங்கையில் சிங்களவர் பெரும்பான்மையாராக இருந்தாலும் தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டு அரசியல் காரணமாக இந்துசமுத்திர பிராந்தியத்தில் அவர்களிடம் சிறுபான்மை உணர்வே மேலோங்கி இருந்தது .இப்பொழுதைய தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் நடவடிக்கையின் காரணமாக அவர்களிடம் அந்த பயம் நீங்கியுள்ளது.அத்துடன் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளை கோமாளிகளாக பார்க்கும் நிலமையே இப்பொழுது ஓங்கி உள்ளது.


ஒரே குட்டை ஊறிய மட்டைகளுக்கு காலமாக காலமாக மாறி மாறி வாக்கு அளித்து தமிழ்நாட்டு மக்களுக்கும் இன்னும் விடிவில்லை. உலக தமிழ் மக்களுக்கும் விடிவில்லை .மாற்று அரசியலை விரும்பி ஒரு மாற்றத்தை விரும்புவர்கள் கூட தேர்தல் பாதையைத்தான் காட்டுகிறார்கள் .உது சாதாரண மக்களுக்கு ஒரு விடிவை தராது என்பது தான் நிதர்சனம்