Pages

வாசகர் வட்டம்

Sunday, March 28, 2010

புதுப்படம் பார்க்க போனதுக்கு எனக்கு செருப்பாலை அடிக்கோணும்

சும்மா இருக்கமாட்டாமால்...எனக்கு இன்றைக்கு முதல் நாளே தசவதாரம் படம் பார்க்க வெளிக்கிட்ட் எனக்கு செருப்பாலை அடிச்சால் மட்டும் காணாது.இன்னும் என்ன என்ன கேடு கெட்டதாலை எல்லாத்தாலையும் அடிக்கோணும் ....எனக்கு உது வேணும் ...உதுக்கு மேலையும் வேணும் ...

தியேட்டருக்கு என்ன இருந்தாலும் அரை மணித்தியாலம் முன்னர் போய் விட்டன்.அந்த தியேட்டர் தொகுதியில் உள்ள டிக்கட் கவுண்டரில் போய் அதிலை இருந்த வெள்ளைக்கார பெட்டை இடம் கேட்டன்.உதுக்களை தமிழ் படம் ஒன்று ஓடுதல்லோ...அதுக்கு ஒரு டிக்கட் தா பிள்ளை என்று ...தமிழில் இல்லை ..அரை குறை ஆங்கிலத்தில் தான் கேட்டன்..பிள்ளை சின்ன சிரிப்போடை என்னை பார்த்துது ....இந்த காட்சிக்கல்ல அடுத்த காட்சிக்கான டிக்கிட் எல்லாம் விற்று தீர்ந்து விட்டது..என்று சொல்லி என்ரை மடியலை நெருப்பை வார்த்துது..கனகாலம் தியேட்டரில் படம் பார்த்து அதுவும் கமலின் படம் என்று பார்க்க போனால் இப்படி இடி என்ரை தலையில் விழும் என்று கண்டனே...

கண்டறியாத இண்டர் நெற்றில் சனம் எல்லா புக் பண்ணி போட்டுதாம்.
அதோடை இப்ப வெளி நாட்டில் கண்ட படி டிக்கட்டின் விலையை நிர்ணயிக்க கட்டுபாடு போலை.
டிக்கட்டின் விலையும் ஓரளவு கட்டுபடியாக இருந்தமையால் குஞ்சும் குருமன் எல்லாம் தியேட்டர் உள்ளட்டு நிரம்பி போட்டுதுகள் போலை...இந்த படத்தை பார்க்க என்ன கோதாரியோ தெரியலை ..பஞ்சாபிக்காரன் போறான் ,துருக்கிக்காரன் போறான் , தசவதாரம் ஹிந்தி படம் இரண்டு கிழமை லேட் என்ற படியால் உள்ள வட இந்தியா ஆக்களும் போயினும் அப்ப எனக்கு என்ன என்று டிக்கட் கிடைக்கும்....தமிழ் படத்துக்கு உந்த மரியாதை கிடைக்குதே என்று ஒரு பக்கம் நல்லாதாக நினைச்சாலும் எனக்கு படம் பார்க்க கிடைக்க இல்லை என்ற கவலையோடு கோப்பி க்கடையில் கோப்பி குடிக்க போனான் அசதியில் தூங்கிவிட்டேன்.

உந்த படத்தை மிஸ் பண்ணினாலும் ...அருமையா படம் அருமையான கனவில் அந்த படத்துக்கு தசவாதரம் என்ற பெயரோ தெரியாது அந்த பட விமர்சனத்தை சொல்லட்டோ கேட்கிறியளே,,அதிலையும் கமல் தான் கதாநாயகன் ,,,இந்த படத்திலை இதிலையும் பத்து வேடம் தான்....

17 நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தின் வடமாரட்சி பிரேதசத்தில கடல் புகுந்த சுனாமியோடு படம் ஆரம்ப மாகிறது .....அந்த சுனாமியோடு கல்லோடு கட்டோடு கட்டப்பட்ட வைணவரும் கரை ஒதுங்கி அதிசயமாக ஒதுங்கி அதிசயமாய உயிர் தப்புகிறார். அந்த வைணவர் பாத்தரத்தில் கமல்.ஒதுங்கிய அவர் வல்லிபுரம் என்ற இடத்தில் ஒரு கிருஸ்ண கோயில் கட்டுகிறார் ...சைவர்கள் அதிகம் வாழும் இடத்தில் இந்த கோயில் அமைந்திருந்தாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமால் அந்த கோயில் கிருஸ்ண ஆழ்வார் கோயில் என்று அழைக்கபட்டு கொண்டிருந்தது

தீடிரென்று இந்த காலத்துக்கு கதை வந்து சம்பந்தமில்லாமால் லண்டன் வீதிகளில் சண்டை நடக்கிறது அதில் ஈழத்து புலம் பெயர் தமிழ் விஞ்ஞானி கமலுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் ....இதில் இரண்டு புலம் பெயர் இளைஞர் கோஸ்டியினர் ...அந்த இளைஞர் கோஸ்டியின் ஒன்றின் தலைவரும் கமல்தான்.....தீடிரென கதை கொழும்பு கொச்சிக்கடை பகுதியில் கதை செல்கிறது அதில் மரிக்காராக கமல் கொச்சிக்கடை முஸ்லிம் தமிழ் நடையில் பேசி அசத்தலாக செய்கிறார்.......மரிக்காரின் நண்பராக தமிழ் கலந்து சிங்களம் பேசும் உபாலியாக அதுவும் கமல் தான்

தீரென்று கதை யாழ்ப்பாணம் செல்கிறது...அதில் கோயில் பிரசங்க நடக்க அதில் பிரசங்கியாக தங்கம்மா அப்பாகுட்டி மாதிரி அந்த வயோதிப மாது வேடத்தில் அதுவும் கமல் தான்

திரைபடத்தில் தீவுப்பகுதியிலிருந்து யாழ்ப்பாண்த்தை படம் பிடித்திருக்கிறார்கள் கடலினூடக யாழ்நகரை பார்க்கிற மாதிரி அழகாக படமாக பட்டிருக்கிறது அழகாகவும் இருக்கிறது .
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் புலம் பெயர் கமிரா கவிஞன் அஜீவனின் திறமை மிக வெளி கொணருப்பட்டிருக்கிறது

இந்த படத்தின் பாடல் கதிர்காம்த்து கந்தா ,,,கதிர்காமத்து கந்தா என்ற பாடலும் ..
கல்லை கண்டால் நாயை காணன் ..நாயை கண்டால் கல்லை காணன் என்ற பாடலும் நன்றாக இருக்கிறது ...மற்ற பாடல்கள் கேட்க கூடியதாக இல்லை

இந்த படத்தின் திரை கதையை கமல் எழுதினாலும் கதை வசனத்தை பாலச்சந்திரன் அவர்கள் மிக நன்றாக எழுதியுள்ளார்

கனவு என்ற படியால் பத்தாவது பாத்திரத்தை இப்படி அமைஞ்சுதோ தெரியவில்லை பதிவர் சின்னக்குட்டியை லண்டனில் வைத்து விஞ்ஞானி கமல் சந்திக்கும் காட்சியில் பேசப்படும் வசனங்கள் அருமையாக உள்ளன....

அந்த சின்னக்குட்டி பாத்திரமும் கமல் தான்

இந்த கனவு படமும் நல்லாய் தான் இருக்கு...இனிமாய் சனம் நெருக்கம் குறைய ஆறுதலாய் தசவதாரம் பார்த்தால் போச்சு

No comments: