1985(சிறுகதை)
வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது
வேகமாக சென்ற லண்டன் நிலக்கீழ் ரயில் தீடிரென்று நின்றது.ஏதோ நினைவுகளுடன் போராடி முட்டி மோதாடி எங்கோ நின்றிருந்தவைனயும் மறித்து திரும்பி நிஜத்துக்கு வரச்செய்தது.என்ன என்று அறியும் ஆவலுடன் தவிக்கும் மற்ற பயணம் செய்து கொண்டிருக்கும் பிரயாணிகள் போலவே அங்கும் இங்கும் நோட்டமிட்டு கொண்டு அசைந்த கண்கள் ஒரு இடத்தில் அசையாமால் தீடிரென்று நின்றது,அந்த வெள்ளை தோலுகளுக்கிடையில் இருந்த ஆசிய நாட்டு பெண்ணாய் இருந்ததுக்கல்ல,,எந்த வித சலனமற்று அமைதியாக அடுத்த கணம் எதுவானாலும் வரவேற்கும் முகபாங்குடன் இருக்கும் அவளை எங்கையோ எங்கையோ நெருக்கமாக பார்த்திருக்கிறேனே என்று என்று .......அவன் தவித்துக்கொண்டு அதற்க்குரிய விடையறிய முன் .நினைவுகள் வழுவி நழுவி நேரம் ,நாள் மாதம் வருடங்கள் கடந்து அந்த வருடத்தில் அந்த நாளில் ஒடுங்கியது
1985 ஆண்டும் ஜனவரி மாதம் ,,குளிர்காலம் ,,எப்பொழுதும் இல்லாத குளிராம் இம்முறை. எப்பொழுது ஒரு முறை தான் இப்படி வருமாம் ,வந்திட்டு போகட்டுமே அவர்கள் இந்த நாட்டுக்கு வரும் பொழுதா வரவேண்டும் அதுவும் .அகதி என்ற கெளவரவ பட்டத்துடன் விஜயம் செய்யும் பொழுது.இலைகளை உதிர்ந்த மரங்கள் அரை நிர்வாணமாக காட்சி அளித்தன,அந்த தொப்பி ,இந்த சால் அந்த ஜம்மர் ,இந்த ஜக்கெட் என ஆயிரத்தெட்டு மயிர் மண்ணாங்கட்டி எல்லாத்தினால் மூடி கட்டி நிற்கும் பொழுது கூட இந்த குளிர் நரம்புகளையெல்லாம் சுண்டி இழுக்குது, இந்த மரங்களுக்கு ஏன் இந்த தேவையற்ற கோலம் என்று தேவையற்ற ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த பொழுது ,அந்த மரங்களுக்கு கீழ் அவனைப்போல பக்கத்தில் இருந்த ஒருவன் இது கெதியிலை தீருகிற விசயமாய் தெரியல ,,என்ன நினைக்கிறியள் என்று இலவச அபிப்பிராயம் கேட்டான்.
.இடம் - மேற்கு பெர்லின் ,நம்ம ஊர் வீடுகள் வேலிகளால் அடைத்தது போல் உயர்ந்து எழுப்பபட்ட சுற்றி வர மதில்காளால் அமைக்கபட்ட ஊர். மேற்கு ஜெர்மனிக்கு சொந்தமான இடம்.ஆனால் நிலபரப்பால் தொடர்பற்ற கிழக்கு ஜெர்மனிக்கு நிலபரப்புடன் தொடர்புடைய பிரிட்டன் , பிரான்ஸ் அமெரிக்க நாடுகளினது இராணுவ கட்டுப்பாட்டுடைய பிரதேசமாகும் ,,,இப்படி சொல்லும் பொழுது உங்களுக்கு விளங்காமால் சிதம்பர சக்கரம் மாதிரி இருக்குது அல்லே,,,\ஹி ஹி ..ஓ,,ஓ.உங்களை ப்போலத்தான் அப்படித்தான் அவனுக்கு அப்பொழுது விளங்காமால் இருந்தது.
அது ஒரு இடைதங்கல் அகதி முகாம் ,அது ஒரு பழைய இராணுவ ஆஸ்பத்திரி ,ஜந்து அடுக்கு கட்டிடம்....இதிலிருந்து மேற்கு ஜெர்ம்னி முழுவுதும் ஸ்டட் அடித்து அனுப்புவார்களாம் ,,அது என்ன வேற கோதாரியோ என்று தெரியலை...அந்த கட்டிடம் முழுதும் இலங்கையர் உட்பட பல் வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் சகவாசம் தான் இருந்தது கொஞ்ச நேரம் முன்பு,,
ஒரு நிமிடத்துக்கு முன்னர் எல்லாரும் கட்டிடத்தை விட்டு உடனடியாக வெளியேறுங்கள் என்ற அறிவிப்புடன் சேர்ந்து வந்த செய்தி ,,கட்டிடத்துக்குள் டைம் பாம் என்று .அதோடை வந்த இன்னுமொரு செய்தி வதந்தியோ தெரியலை வைத்தது சீக்கியராம் ,அவங்கடை முக்கியான கோயிலுக்குள்ளை இந்திய ஆமியாம் ,,இந்திய ஆமி அதுக்குள்ளை போன காரணம் இந்திரா காந்தியை சுட்ட தொடர்புடைய ஆக்களை பிடிக்கவாம் ,,அதுக்காக பெர்லினில் இந்த கட்டிடத்துக்கு அகதியாக வந்த சீக்கியர் ஏன் டைம் பாம் வைக்கோனுமென்ற காரணம் விளங்கவில்லை.
அந்த கட்டிடத்தின் மைதானத்தில் அகதிகள் எல்லோரும் அங்கங்கே நடுபகுதியில் சிலரும் இலைகளற்ற மரங்கள் கீழே சிலர் அங்கங்கே அமர்ந்திருக்கின்றனர் ,,,பொலிசாரும் குண்டு மீட்பு படையினரும் கட்டிடத்துக்குள்..மதிய சாப்பாட்டு நேரம் அப்போ...இதுவரை வாயிலை ஒரு பொழுதும் வைத்து பழக்கமில்லாத சாப்பிடு தந்தாலும் மணியடிச்ச மாதிரி சாப்பாட்டை நேரத்து தந்து விடுவாங்கள் .இந்த பிரச்சனையால் அந்த நேரம் எப்போவோ போய்விட்டது.பக்கத்தில் இருந்த நண்பருக்கு வயிற்றைக் கிண்டுது போலை அதற்காக இலவச அபிப்பிராயத்தை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அந்த மைதானத்தை பார்த்தால் அங்கங்கே பல சிறுகதைகளும் சில உப கதைகளும் நடந்து கொண்டிருந்தன,,பக்கத்தில் இருப்பனுக்கு பதில் சொல்ல வேணும் அதோடை பார்க்கிற எல்லாத்தே கதையாக கிரகிக்க வேணும் என்றால் அவனால் முடியிற காரியமா?
தூரத்தில் ஒருத்தி யாரோயோ தேடி கொண்டிருக்கிறாள்.. அது நமது கதாநாயகி அல்லோ .அவள் தேடுவது சுரேசாக நிச்சயமாக இருக்காது .எப்படி தெரியும் என்று கேட்கலாம்.நேற்றுத்தான் அவர்களிடையே உள்ள பிரச்சனைக்காக அவன் மத்தியஸ்த்துக்கு போய்ந்திருந்தானே ...நாடு விட்டு நாடு வந்து அடுத்து என்ன நடக்க போகுது என்று தெரியாத இந்த மூன்று கிழமைக்குள் அவர்களிடையே என்னவெல்லாம் நடந்து விட்டது .நடந்திருக்காது நடக்கேலாது என்கிறீர்களா ? சுரேஸ் கூட அந்த சில நிமிடங்களிலை நடந்த அந்த விசயத்தையா தூக்கி பிடிக்கிறியள் என்கிறான் .அவளோ வருடக்கணக்காக பாதுக்காப்பாக வைத்திருந்ததை அந்த மூன்று கிழமைக்குள் ஏற்பட்ட வினையால் அந்த நேரங்களில்அதை இழந்து விட்டேன்.என்கிறாள். அது என்று ஒன்றும் இல்லை என்கிறான் சுரேஸ் .ஒருவேளை,இருந்திருந்தால் முக்கியமான ஒன்று என்றால் சில நிமிடங்களில் இழக்கக்கூடிய விசயமாக என்கிறான்.அதற்க்கு அருவமில்லை உருவமில்லை ,,,டைம் பாஸ்க்கா த்தான் அவளுடன் பழகினேன்,மூன்று கிழமையில் எனக்கு காதல் வருமா என்ன..வராதா காதலை வா வா என்கிறியாள் என்னங்க நீங்க என்கிறான்? இந்த மூன்று கிழமையில் இவ்வளவு காலமும் இல்லாத சுதந்திரத்தை அல்லது ஏங்கிய சந்தோசத்தை பாதுக்காப்பான முறையில் பயன் படுத்தி கொண்டாள் அவ்வளவு தான் என்பது சுரேஸின் வாதம்....சுரேஸை அவளைப்போல இந்த மூன்று கிழமைகளில் தான் அவனுக்கும் பழக்கம் ...அந்த மூன்று கிழமைகளில் அவனைபற்றி அறிந்து கொண்டது உதைப்போல பல சிறுகதைகளை
அவளோ அவனை உண்மையாக காதலித்தேன் இப்பவும் கூட அவரை காதலிக்கிறேன் ,,அவரின் சந்தோசத்திற்க்காத்தான் அந்த நேரத்தை பகிர்ந்து கொண்டாள் என்று கூறுவதோடு காலம் காலமாக நம்மவர் சொல்லும் காதலின் அர்த்தத்தை வியாக்கியனம் செய்து கொண்டாள் ....
என்ன வந்தததோ தெரியவில்லை ...சுரேஸ் தீடிரென்று மத்தியஸ்த்தம் செய்ய போன அவனுக்கே தெரியாத விடயத்தை ஒன்றை கூறினான் ...நான் இங்கை இருக்கிறது பிடிக்கவில்லை என்று சிலோனுக்கு போறுதுக்கு எழுதி கொடுத்திட்டன் .வாற கிழமை கொழும்புக்கு பயணம் தெரியுமோ என்றான்...
இவள் காதல் கத்திரிக்காய் பெரிசா பீத்துறாள் ,,,என்னோடை கொழும்பு வர தயாரோ என்று கேட்டு சொல்லு என்றான்
அவளின் பதிலுக்கு காத்திருக்காமால்..... இவள் இந்த வெளிநாட்டு வாழ்க்கையை விட்டு வரமாட்டாள் என்று எனக்கு நல்லாய் தெரியும் அதனால் தான் இன்னும் சொல்லுறன் ..இந்த காதல் என்றதுக்கு உருவமில்லை அருவமில்லை எந்த மண்ணாங்கட்டிமில்லை என்று சொல்லி கெக்கரித்து சிரித்தான்.
அவள் எந்த விதமான சலமற்று சொன்னாள் ... கொழும்புக்கு உன்னுடன் வரமாட்டன் ,,உன்னைப்போல காதலை டைம் பாசுக்கு எடுத்ததைப்போல இதை எடுக்க முடியாது ஏனென்றால் உண்மையான அகதி நான் ...எப்படி இருந்தாலும் உன்னை இன்னும் காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகுரலுடன் அவ்விடத்தை அகன்றாள்...
இன்னும் நேரமாகுமாகுமோ...என்று தெளிவான ஆங்கிலத்தில் பக்கத்தில் இருந்த ஒன்று அவனைக் கேட்டது....
அவன் ரயில் இருப்பதை அறியாமல் குழப்பமான பதில் கூறும் பொழுது தான் அவள் கண்டு கொண்டாள்
ஞாபகமிருக்கோ என்றாள்
நல்லாய் ஞாபகமிருக்கு ..எப்படி இருக்கிறியள் என்றான்
பல வருடக்கதையை ஒரு சொல்லில் சொல்லுவது மாதிரி இருந்தது
நான் லண்டன் வந்தாப்பிறகு அவரை இலங்கையில் தேடி கண்டு பிடித்து ஸ்பொன்சர் பண்ணி கூப்பிட்டு திருமணம் செய்து இரண்டு பிள்ளைகள் என்றாள்
சந்தோசம் என்றேன் ..அவனை விசாரித்ததாய் சொல்லுங்கோ...என்று முடிக்க முன்
இடைமறித்து சொன்னாள்,,அவர் என்னோடை கோபம் ஒரு வெள்ளையோடை இருக்கிறார்.. என்றாலும் எப்ப வந்தாலும் அவரை ஏற்றுக்கொள்ளுவன் அவருக்காக காத்திருக்கிறன் என்றாள்
தீடிரென்று ஏதோ காரணத்துக்காக இவ்வளவு நேரமும் நின்ற ரயில் பெரிய ஹாரன் சத்தத்தை அடித்து விட்டு தீடிரென்று வெளியேறியது
அந்த சத்தத்ததின் மொழிபெயர்ப்பு இவனுக்கு இப்படி இருந்திருக்குமோ
அவனும் மாறப் போறதில்லை அவளும் மாறப் போறதில்லை ..இந்த சமூகம் மாறப்போறதில்லை...என
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அவள் அப்பொழுது நடந்து கொண்டிருந்த இடம் ஒரு சூனிய பிரதேசம் ஒரு ரயில் நிலையமும் கூட...அந்த நாட்டவர்கள் இறங்க முடியாத வேற நாட்டவர்கள் இறங்கி ஏறக்கூடிய இடம்,,அவளுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்த பொழுது வழித் துணைக்கு வந்தவளைக்கூட யாரோ தெரிந்தவர்கள் கூட்டி சென்று விட்டார்கள் .கூட வந்தவளும் அவளைப் போல அகதியாக வந்தவள் தான் ,,ஏன் அவளை மட்டும் சொல்லுவான்..அந்த நிலையத்துக்குள் நுழைந்தவர்கள் பலரும் அந்த நோக்கத்துட்ன் வந்தவர்கள் தான் .அவர்கள் எல்லாம் இந்த இடத்துக்கு வந்த பின் எல்லாம் வெற்றிக் கரமாக முடிந்து விட்டன என்ற களிப்புடன் கூட்ட வந்தவர்களுடன் சென்று கொண்டிருக்கிறார்கள்
.இவளை கூட்ட வரவேண்டியவர்கள் இன்னும் வரவில்லை ..அந்த நிலையத்தில் தீர்வையற்ற விலையில் மதுபானம் எடுக்கலாம் அந்த நோக்கத்துக்காக அங்கு வருபவர்களும் உண்டு.அப்படி வந்தவர்களும் திசை தெரியாமால் நிற்கும் இவளைப் போல நிற்பவர்களையும் மதுபானங்களுடன் கூட்டி போவதுண்டு.நிறவெறியில் வந்த ஒருவன் பார்க்க தமிழன் போல இருந்தான்... அக்கா சிறிலங்காவோ ...என்று தள்ளாடிய படி கேட்டான்.அவனே தொடர்ந்தான்...இங்கை மூன்று எழுத்துகள் கனக்க உலவாவி கொண்டிருக்கு .பேசாமால் இதிலை நிக்காமால் பக்கண்டு அடுத்து வாற ரயிலிலை ஏறி மாறுங்கோ ,,,இன்னும் இங்கிருந்து அரை மணித்தியால ஓட்டம் இருக்கு
,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு
,,,பயப்பிடாதையுங்கோ..ஒன்றுக்கும் யோசியாதையுங்கோ ,,,எங்கட ஆட்களுக்கு உதவி செய்யாமால் யாருக்கு உதவி செய்ய போறன் உங்களை கூட்டி எண்டு போறனே என்று பட பட வென்று சிவாஜி பாணியில் வசனம் பேசி கொண்டிருந்தான் ,,,வசனம் பேசுவதற்கு குடித்த பானமும் உதவி செய்து கொண்டிருந்தது.அவனுக்கு
அவள் யாருடைய பேச்சையும் கேட்க தயாராய் இல்லை .யாருடைய பேச்சையும் கேட்க அனுமதி இல்லை. ஏனெனில் இவள் செல்ல வேண்டிய இடம் ,இடத்தை அடைவதற்கான பாதை அதில் வரும் இடர்கள் அதை சமாளிக்க வேண்டிய தந்திரங்கள் இலங்கையிலையே போட பட்டு விட்டன. அதை அவளின் அண்ணன் மேற்கு ஜெர்மனி ஏதோ நகரத்தில் இருந்து தொலைபேசி மூலம் துல்லியமாக தெரிவித்து இருந்தான், இராணுவத் திட்டம் போல அவன் கூறிய வழி முறையில் ஆலோசனையில் ஒரு இடத்தில் தவற விட்டால் கூட தான் இருக்கு இடத்துக்கு இலகுவாக வந்து சேர மாட்டாய் என பல முறை எச்சரித்து இருந்தான்.எச்சரிப்புகளில் முக்கிய எச்சரிப்பும் ஒன்றும் இருந்தது ..மேற்கு பெர்லினில் பொலிசிலை பிடிப்பட்டியோ அங்கு வைத்து இருந்து காலம் தாழ்த்தி அவர்கள் விரும்பும் ஏதாவாது மேற்கு ஜெர்மனி நகரத்துக்கு அனுப்புவார்கள் . அப்படி நடந்ததால் உனக்கு அது கட்டாயம் நரகம் மாதிரி இருக்கும் சில வேளை என்று.அதனால் அந்த திட்டத்தின் வரைவில்ஒரு முனை கூட அழியக் கூடாது என நினைத்துக் கொண்டாள் ,,,தன்னை கூட்ட வர வேண்டியவர்களின் தாமதத்தினால் அது எல்லாம் தவிடு பொடியாக போய் விடுமோ என சலனப்பட்டாள்
இவள் இலகுவில் எதுக்கும் சலனப்படக்கூடியவள் அல்ல..என அவளை தெரிந்தவர்களுக்கு தெரியும் ,,எந்த எதிரியையும் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடைய வைக்கும் ஆயுதம் அவளிடம் இருந்ததது.அது என்னவெனில் அவளின் அதரத்தில் எப்பொழுதும் பூத்துக் கொண்டிருக்கும் புன்னகை ,,,அந்த புன்னகைக்கு அர்த்தம் தெரியுமால் உள்ளுர் இளைஞர்கள் முதல் ஆசிரியர்கள் பெரிசுகள் வரை தலையை பிச்சு கொண்ட வரலாறுகள் உண்டு.கோபத்துக்கும் அந்த புன்னகை தான் .சந்தோசத்துக்கும் அந்த புன்னகை தான்.. .நீ என்ன ஜென்மமடி நட்புடன் கண்டிக்கும் தோழிகளும் உண்டு..அவளை பற்றி யாரும் தவறாகச் சொன்னால் உன்ரை நாக்கு அழிகிடுமடா ..அது ஒரு பாவமடா ,,அதைப் போய் ..என்று அவளுக்கு வக்கலாத்து வாங்கும் ஒரு ரசிகர் பட்டளாமே இருக்கு உள்ளூரில் ,மொனலீசாவின் ஓவியம் போல புன்னகையை பரப்பி கொண்டிருந்த அவளை சொந்த கிராமத்தை விட்டு உடனடியாக விலகி இப்படியான கரடு முரடனான வழிகளால் அந்த அண்ணன் வசிக்கும் நாட்டுக்கு சென்றே ஆக வேண்டும் நிர்பந்தம் வரும் என கனவில் கூட நினைத்து இருக்க மாட்டாள் சிறிது காலங்களுக்கு முன்
நால்வர் புடை சூழ வந்த உயர்ந்த ஒருவன் அவளின் அருகில் வந்து நீங்க அவரின் தங்கையா ,,,என நளினமாக கேட்டான் ..எப்படி அவளை அவன் இலகுவாக அடையாளம் கண்டான் என்பதற்க்கு ஆச்சரியபடுவதுக்கு ஒன்றுமில்லை .அவர்கள் போட்ட இராணுவத்திட்ட மாதிரியானதின் ஒரு பகுதி தான் இதற்கு உதவி இருக்கு என கூறிக்கொண்டாலும் ,,,அவனுக்கு இது எல்லாம் பெரிதான விடயமல்ல ஏனெனில் எத்தனை பெயரை இப்பிடி அழைத்து இதுவரை காலமும் சென்று இருப்பான் ...ராஜா என்று எதோ பெயர் சொல்லி தன்னை அறிமுகப் படுத்தி கொண்டான் ... தனது பெயரை பதிலுக்கு இப்பொழுது சொல்ல வேணுமென்று அவசியமில்லை என்று பட்டதோ என்னவோ தெரியவில்லை. அர்த்தம் தெரியாமால் மற்றவர்களை கிறங்கடிக்க வைக்கும் வழமையான புன்னகையையே தவழ விட்டாள்.
அந்த அரை மணித்தியால நிலக்கீழ் ரயில் பிரயாணம் அதற்க்குள்.அதில் அவளை அளவெடுத்து கொண்டிருந்தார்கள் அவனும் அவனுடன் வந்தவர்களும். அவனை தவிர மூவர் .அதில் ஒருவர் இவளுக்கு ஒரு சித்தப்பா முறை வரக்கூடியளவுக்கு வயதானவர் மற்றவன் ஒருவன் ராஜா மாதிரியே இருந்தான்.மற்றவன் கொஞ்சம் வயதில் இளையவன் ...இவர்கள் அனைவரும் அவன் தூக்கி எறியும் எலும்பு துண்டுக்காக ஒட்டி இருப்பவர்கள். அவன் விடும் ஏவல்களை தப்பமால் செய்வர்கள் ...எல்லாருக்கும் கிழக்கு ஜெர்மனியின் மலிவு விஸ்கியினால் ஏற்பட்ட மயக்கம் ..அவர்களின் கண்களை முகத்தில் எங்கோ செருக வைத்து கொண்டிருந்தது ...ராஜா மட்டும் ஏனோ தெரியாது இந்த மம்மல் நேரத்தில் கூட கூலிங் கிளாஸ் அணிந்திருந்தான் .அதனால் தலையிலிருந்து கால்வரையும் அணு அணுவாக பார்த்து கொண்டிருந்தான். உள்ளுக்கு விழுங்கிய விஸ்கிக்கு அவளை taste ஆக்கி கொண்டிருப்பது அவளுக்கு தெரியாது. அந்த வயதில் குறைந்த இளையவன் மட்டும் எதிர்காலத்தை அறிந்த ஞானி போல் குழம்பினான் ...அந்த அவளில் தவழும் கள்ளம் கபடமற்ற புன்னகை அந்த சிறியவனுக்கு என்னவோ செய்திருக்கவேண்டும் .ஏன் இவள் இவனிடம் மாட்டினாள் ,இவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேணுமென்று உள் மனது துடித்தது.. ஆனால் வெறியின் வேகத்து இணங்க தனது கையறந்த நிலையை எண்ணி ஏற்ற இறக்கத்துடன் வேதனைப் பட்டு கொண்டிருக்க மட்டுமே முடிந்தது அவனால்...இவர்களின் எந்த மனநிலையையும் கணக்கில் எடுக்காமால் அந்த நிலக்கீழ் ரயில் விபரீதமான சத்தத்துடன் மிகப் பெரிய இருட்டை இவர்களுக்கு வழங்கி விட்டு பெரிய சுரங்கத்தினூடாக போய் கொண்டிருந்தது.
நிலக்கீழ் ரயில் நிலையத்தில் ஓரிடத்தில் இறங்கினார்கள் ..வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விளக்கின் ஒளியினால் நகரம் பகல் போல இருந்தது .அது போல நீண்ட அடைக்கபட்ட மதிலை தாண்டி மெல்லிய ஒளியில் தூங்கிய நகரமும் அவள் நின்ற இடத்தில் இருந்து பார்க்க கூடியதாய் இருந்தது..அது கிழக்கு பெர்லின் இது மேற்கு பெர்லின் என ஊகித்து கொண்டாள்,,,
இன்று இரவு பாரிஸ் செல்லும் ரயிலில் உங்களை அனுப்ப இயலாது ..தாமதமாகி போய் விட்டது .நாளை காலை ரயிலில் தான் போகலாம் என்ற குண்டை தூக்கி போட்டான்
ஒரு டெலிபோன் பூத்தடியில் காத்திருந்தார்கள் டெலிபோன் பண்ணுவதற்க்கு ..ஒரு ஜெர்மானியன் ''சைஸ'' என்று சத்தம் போட்டு கொண்டு சென்றான் . அது ஜெர்மனியர்களின் பிரணவ மந்திரம் போன்றது என்று அவர்களுக்கு தெரியும் அவளுக்கு தெரியாது.
முதலில் அவன் அவளின் அண்ணனுடன் உள் சென்று பேசினான்
பின் அவள் பேசினாள்
இவர்களின் ஒழுங்குமயமான திட்டத்தை உடைத்தெறிந்தது ராஜாவின் திட்டம் தான் என்பது அவர்களுக்கு தெரியாது
அன்று இரவு அவள் அந்த மூவருடன் தங்க வேண்டும் என்ற பதட்டமின்றி அதே புன்னகையுடன் ,அவர்களின் வீடு என்ற கோதாவில் இருக்கும் அறைக்குள் நுழைந்தாள் ,பிரமச்சாரிகளின் வீட்டை வலிந்து சுத்தம் செய்திருப்பது தெரிந்தது..அதனால் சுத்தம் செய்ய படமாலே பல பகுதி இருந்தது..கண்ணுக்கு புலப்பட்டது.அறைச் சுவரில் அரை குறை ஆடைகளுடன் கவர்ச்சி கன்னிக்ள் நடனமாடிக்கொண்டிருந்தனர்
அந்த சிறியவனையும் ராஜாவையும் தவிர மற்றவர்கள் இருவரும் பிணமாகாத குறை ஒன்றை தவிர மற்றும் படி எல்லாமாகி அந்த வெளி கோலில் உள்ள செட்டியில் சயனித்து கொண்டிருந்தனர்
நீங்கள் உள்ளே படுங்கோ ..நாங்கள் வெளியிலை படுக்கிறம் தேவை என்றால் கூப்பிடுங்கோ என்று நாகரிகமாக கூறினான்
அதே புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எந்த வித அவ நம்பிக்கையின்றி உள்ளே சென்றாள்.
நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..
அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,
நீண்ட பயண களைப்பு நித்திரை என்ற ஓட்டத்தினூடாக இரவை விரைவாக்கியது ...பலத்த சத்தத்துடன் அலாரம் ஒன்று இருளை விலக்கி வெளிச்சத்தை தந்து உறுமி விட்டு அடங்கியது..
அதை தொடர்ந்து கதவு மெல்லிதாக தட்டும் சத்தம் கேட்டது ,,
பதட்டத்துடன் வந்த அவன் வெளியில் பொலிஸ்காரர் கதவை தட்டுகிறார்கள்.
ஒரே வழி இருக்கு என்றான் ..நாங்கள் குடும்பஸ்தர்கள் மாதிரி நடிப்பது.
அவர்கள் கொஞ்சம் நாகரிகம் தெரிந்தவர்கள் டிஸ்டர்ப் பண்ணமாட்டார்கள் அதன் மூலம் தப்பிக்கலாம் என்றான்
அவள் அதே புன்னகைத்தான் பதிலாக தந்தாள் .
இருவரையும் பெட்சீட் மூடியது
அவன் அவனது வேலைதிட்டத்துடனான அடுத்த நிகழ்ச்சியை ஆரம்பிக்கலானான்..சந்தர்ப்பம் அமைந்தால். அரைவாசிக் கட்டம் மட்டும் தான் முயற்சி செய்வேண்டும். அதன் பின் இருவரின் செய்கையாக மாறிவிடும் என்ற அவனது அனுபவ கணிப்பு அங்கு பொய்மையாகி கொண்டிருந்தது.
அவள் அவனது பிடியிலிருந்து விலக மூர்கத்தனமாக போராடி கொண்டிருந்தாள்
மீண்டும் கதவு சத்தம் கேட்டது ..அதன் பின்,ஓங்கிய உதை சத்தத்துடன் கதவு திறந்து கொண்டது
அங்கே அவர்களில் அந்த வயதில் இளையவன் பெரிய கொட்டனுடன் நின்று கொண்டிருந்தான்
அவளை வெளியை விடு இல்லாவிட்டால் ,,,என்று கொண்டு
வெளியில் வந்து தன்னை மறந்து அவனிடமிருந்து தப்பிய சந்தோசத்தில் அந்த சிறியவனின் கையை பிடித்து நன்றி மனோபாவத்துடன் முத்தமிட்டாள்
கையை உதறிய அவன் ..நீயுமா பரத்தை ..ஏன்டி நாடு விட்டு நாடு வந்து எங்கட கலாசாரத்தை கேவலபடுத்தி எல்லாரும் அலையறியள்..என்று கூவினான்
..இதற்கு அலைவது எனது நோக்கமாக இருந்தால் உன்னிலும் பார்க்க பார்ப்பதற்க்கு கவர்ச்சியாய் இருக்கும் அவனிடம் இணங்கி இருப்பேனே,,,என சொல்ல வாய் எடுத்தவள் சொல்லவில்லை ..ஆனால் வழமையான அவளது புன்னகையே பதிலாக தந்தாள்
அவள் இப்பொழுது பாரிஸ் செல்லும் ரயிலுக்குள் இருக்கிறாள் ,,,மேற்கு பெர்லின் zoolagy garden ரயில் நிலையத்தில்....ஆரோ இரு வெளி நாட்டவரை பொலிசார் பிடித்து செல்லுகின்றனர்.இவள் இருக்கும் இடத்தையும் தாண்டி செல்லும் நோக்கிலும் ஒரு பொலிஸ்காரன் வருகிறான் ..ஆனால் அதே புன்னகையுடன் சலனமற்று இருக்கிறாள் ...அவளது தெளிந்த புன்னகையோ தெரியாது ...வந்தவன் .எந்த வித சந்தேக படாமால் தாண்டி சென்று இறங்கி விடுகிறான்..ரயிலும் வெளிக்கிட்டு விட்டது....இதே புன்னகையுடன் இனிமேல் ஒரு பிரச்சனையில்லாமால் அண்ணணின் மேற்கு ஜெர்மனியின் நகரத்துக்கு சென்று விடுவேன் என்று அவள் நம்புகிறாள்
நாங்களும் அவள் போல அப்படியே நம்புவோம்
மிதுவின் கிறுக்கல்களிலிருந்து-நன்றி
மிதுவின் கிறுக்கல்களிலிருந்து-நன்றி