Pages

வாசகர் வட்டம்

Monday, August 26, 2013

என்னத்தை சொல்லுறது( சிறுகதை)நித்திரை கொண்டிருப்பதே தெரியாமால் கொண்டிருந்த  நித்திரை தானாகவே  அவனை குழம்பியது.இருட்டில் இப்ப நேரம் என்ன என்று திண்டாடி சுவரில் இருந்த மணிக்கூட்டில் இருந்த  கம்பிகளை அனுமானிக்க  கண்ணை கொண்டு எத்தனை சித்து விளையாட்டுகள் செய்தாலும் முடியவில்லை.கொஞ்ச நாளாக  இப்படித்தான் கொஞ்ச காலமாக  குழப்புகிறது  இந்த நேரத்தில் அந்த நேரம் தான்  இப்பவாக இருக்க கூடும் என்று நினைத்தவன் . என்ன நேரமாக இருந்தாலும் வழமையாக எண்ணங்களோடு போராடி கொண்டு நித்திரைக்கு முயன்று  திருப்ப படுப்பது போல இன்று செய்வதில்லை என்று தீர்மானித்தான்.சோம்பலை கஸ்டப்பட்டு முறித்துக்கொண்டு தூரத்தில் சுவரில் இருந்த சுவிட்சை  தடவி தேடி அமிழ்த்தினான் .வெளிச்சமும் அவனைப் போலவே சோம்பலை முறித்து கொண்டு எழும்புவது போல மெது மெதுவாக அறை முழுவதையும் வெளிச்சமாக்கி அங்கங்கே அநாதையாக ஒழுங்கற்று சிதறி கிடக்கும் பொருட்களை  சுட்டி காட்டியது.

இப்படி ஒழுங்கற்று இருந்தது கிடையாது. அது அது அந்த இடத்தில் இருந்து கொண்டு  அழகாக இருந்து கொண்டு இருக்கும் . பார்ப்பவர்களுக்கு அருண்காட்சி சாலை போல இருக்கும் அவனது அறை.இவனை மட்டுமல்ல இவனைப்போல  உந்த ஒழுங்குகளை போன்ற பல நெறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத தெரியாத  பலர் அகதிகளாக இந்த  கிராமத்துக்கு வந்த பொழுது  ஒரு வழிகாட்டியாக செயல்பட்டவனின் பெயர் தான் சுரேஸ்.அவனால் ஒரு ஒழுங்கு முறைக்கு  வழிகாட்டப்பட்ட இவன்  இப்படி கொஞ்சநாளக குழம்பிக் கொண்டிப்பது  அவனால் தான்.அவனை நீண்ட காலத்துக்கு பின்  அந்த நிலமையில் சந்தித்து இருக்காவிட்டால். எப்பவோ  எந்த நேரமோ மறந்த காலத்தை வலிந்து இழுத்து பிடித்து வைத்து கொண்டு தூக்கத்தை தொலைத்து கொண்டு இருக்க மாட்டான். திரைச்சீலையை இழுத்து பார்த்தான். ஹாலந்து நாட்டின்  அந்த கிராமம் இருட்டினுள்  அமைதியாக உறங்கி கொண்டிருந்தது. சரியான நேரம் தெரியாவிட்டாலும் நள்ளிரவு கடந்து உதயத்தை நெருங்காத நேரம் என்று தெரிந்து கொண்டான்.

சுரேஸ் என்ற பெயரை கேட்டாலே அகதி நாமம் சூட்டப்பட்ட நம்மவர்களுக்கு இயல்பாக அவனே எதிர்பார்க்காத பயம் கலந்த மரியாதை வரும்..இந்த அடி தொண்டையால் காறி துப்புவது  போல பேச வேண்டிய  இந்த மொழியை பேச மாட்டாமாலும் விளங்க மாட்டாமாலும் தவிக்கும் பொழுது ஆத்பாவனாக வந்து உதவி  செய்து இருக்காவிட்டால் அந்த நிலை எப்படி இருக்கும் .அதை நினைத்து கூட பார்க்க முடியாமால் இருக்கின்றது..இயல்பாக அவன்  தமிழிலில் பேசும் பொழுது  கூட  உடல் மொழி கூட இந்த நாட்டவர் மாதிரி மாறி இருந்தது.பாவித்த இரண்டாம் தர இந்த உடுப்புக்களை றெட் குறஸ் வழங்கியிருந்தது. அதை அணியும் முறை தெரியாமால்  அணிந்து கொண்டு நம்மவர்கள்  வினோத உடை போட்டியில்  திரிவது போல் திரிவார்கள். நேர்த்தியாகவும் அழகாகவும் உடை அணிவது முதற் கொண்டு இதர புதிய  தெரியாத விடயங்களையும்  இதமகாவும் மனம் கோணாமாலும் எடுத்து கூறுவான்.இவருக்கு  பெரிய டச்சுகாரர்  என்ற நினைப்பு  என்று  புறம்போக்குகள்  சில காதில் பட்டும் படாமாலும் கூறுவார்கள் .உதவி பெற்றும் இப்படியெல்லாம் கூறுகிறார்கள்   என எந்த வித கோபமோ எதிர்வினையும் இல்லாமால் எந்த நேரம் சென்றாலும் எப்பவும் உதவி செய்யும்  பிரதி பலனற்ற நேசம் எப்படி வந்தது   என்ற ஆச்சரியங்களோடு சுரேஸோடு மலர்ந்த  நட்பு இன்று போல் இருக்கிறது .ஆனால் நாட்கள் மாதங்கள்  கடந்து வருடங்கள் ஆகிவிட்டன.

இது போல் நடுநிசி கடந்த நேரமல்ல.அன்று .கட கட வென அறையை  ஓங்கி அறைவது  மாதிரி சத்தம் கேட்டது. பொதுவாக  இந்த நேரத்தில் நடைபெறாத விடயம் .திறந்து  பார்த்தால் சுரேஸ் வேர்க்க விறுக்க  ஏதோ அதிர்ச்சியான சம்பவத்தில் இருந்து தப்பி வந்தவன் போல் இருந்தான் .என்ன விசயம் என்று கேட்டு வாய் மூட முன் வந்த வேகத்திலை கதவை இறுக சாத்தினான் .என்ன ஏது என்ன விசயம் என்று தொடர்ந்து கேட்டு  அவனுடைய படபடப்பை கூட்டாமால் நிதானமாக கேள்வி குறியுடன் பார்த்தான்.சொல்லுறன்  இரு என்றவன் சொல்லமால்  நீண்ட நேரமாக இருந்தவன்  தீடிரென்று.எல்லாருக்கும் தெரிந்த கதை அவனுக்கும் தெரிந்து இருக்கும் என்ற நினப்பில் குமுறிக்கு கொண்டு வீச்சு வீச்சாக சொல்லி கொண்டிருந்தான். தொடர்ச்சியில்லாத  புத்தகத்தின் பக்கங்களை வாசிப்பது போலிருந்தது அவனுக்கு.

எப்பவும் அவவோடைய் தான் திரிவான் , மம் என்று தான்  அழைப்பான் .அப்படி ஏன் அழைக்கிறான்  ஒரு கணத்தில் தோன்றும் .கவர்ச்சியாக அணியும் ஆடைகளும்  அலங்காரங்களும்  அவவுக்கு உதவும் பொழுது..எப்படியோ மறு கணம் நாற்பதை தாண்டிய டச்சு பெண்மணி என்பதை ஏதோ அசைவுகள் காட்டி கொடுத்துவிடும்.இளமையும் கவர்ச்சியும் மொழிவளமும் அவனுக்கும் இருந்தும் தாண்டி
செல்லும்  டச்சு டீன்ஏஜ் பெண்களின் கண் குடுப்புகளுக்கும்  அழைப்பு சிரிப்புக்களுக்கும்  எந்த விதமான  எதிர் வினையாற்றாமால் இருப்பது  இந்த விசயத்தில் எங்கையாடா என்று காத்து இருப்பவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை உருவாக்கியது.கற்பனைக்கு கடிவாளத்தை தட்டி விட்டு  ஆளுக்கொரு ஒருவர்  தங்களுக்கு ஒரு கதையை உருவாக்கினார்கள் .எத்தனை கதை உருவாகினாலும் கதையின் போக்கில் வித்தியாசம் இருந்தாலும் பொது அம்சமாக விளங்கியது அவனுக்கும் அவவுக்கும் அது என்றது தான்.

இது பற்றி சிலரது கேள்விகளுக்கு அனாசியமாக பதில் சொல்வதுண்டு .அதில் உண்மை பொய்க்கு அப்பாற்றப்பட்ட பதிலாக இருக்கும். சொல்லும் பொழுது சம்பந்தமில்லாத அதிகம் சிரிப்பது ஏனென்று விளங்காத அர்த்தமாக இருக்கும் .இளசு சரி பழசு சரி எல்லாம் ஒன்று தான் என்று அநாசியமாக சொல்லி கடக்கும் பொழுது கண்ணதாசனின் தத்துவம் மாதிரியும் இருக்கும்..எங்கையோ ஓரு கிராமிய சினிமா பாடல்  கிட்டத்தில்  கேட்கும் பொழுது தூரத்தில் போய் விட்டனே என்று குமுறிக் கொண்டு நான்  மீண்டும் தமிழனாக வேண்டும் என்பான். நீ மட்டுமல்ல எங்கோ தொலைத்து விட்டு தொலைத்தது என்னவென்று தெரியாமால் திணறுவது  நாங்கள் எல்லாரும் தான் என்று கூறினாலும் அவன் ஆறுதல் அடைவதில்லை.இவகளெல்லாம் வேசைகள் என்று கூறி தமிழ் பெண்கள்களை எல்லாரையும் கண்ணகிகள் ஆக்கி தெய்வமாக்கி சிலுவையில் அடிக்கும் கருத்துகளை எவ்வளவு விரைந்து நிராகரிக்க முடியுமோ விரைந்து நிராகரிப்பான்.முரண்பாடான அவனாக தோற்றமளித்தாலும் இவர்கள் எல்லாம் இயற்றாத தெரியாத சொல்லாத கதை ஒன்று அவனிடம்  இருக்கு என்று  பலருக்கு தெரியாது.

கீழே டாய்லெட்டில் தண்ணி அடிக்கும் சத்தத்துடன் டிவியின் சத்தமும் மெதுவாக கேட்டது அகதி அந்தஸ்த்து ஏற்று கொள்ள படாத பலர் சேர்ந்து வாழும் வீட்டில் இது சகஜம் .அவர்கள் அவர்கள் நேர அட்டவனைக்கு ஏற்றவாறு பகலை இரவாக்கியும் இரவை பகல் ஆக்குவதும் ...இரகசியமான விசயம் போல அவன் சொல்ல தொடங்கும்பொழுது இருந்த தோரணை சுருதி மாறி பலத்த சத்தத்துடன் சொல்ல தொடங்கினான். எத்தனை தரம் தான்டா ஒரு நாளைக்கு செய்யிறது.அடங்க மாட்டா என்கிறாள் என்று ஒருமையில் திட்டியது அவன் மம் என்று இவ்வளவு காலமும் அழைத்தவளை தான் என்று விளங்கியது.அவன் அவவின் வீட்டில் வாழுகின்றான் என்பதை மீறி இப்படி ஒரு உறவு இருந்தாலும் இவனே விரும்பாத இப்படியொரு வன் புணர்வு உறவு இருக்குமென்று கடைசி வரை நினைக்கவில்லை ..

அதுவும் ஆண் மேலே..
குடும்ப வறுமையுடன் ஆறு பெண்கள் சகோதரிகள் அதில் ஒன்று ஊமை ஒன்றுக்கு கண் முழுமையாக தெரியாதது, ஒன்றுக்கு காது தெரியாது  ஒன்று கால் ஊனம் என்ற குறைபாடுளுடனும் இருக்க பெண்மையும் ஆண்மையும் சக வீதத்தில் கலந்த லட்சணமான  இவனுக்கு  அனுதாபத்துடன் உதவி செய்வது போல் தொடங்கினாள்.உண்மையில் அப்படித்தான் தொடங்கி இருக்க கூடும்..இதுவும் கூட  அப்படி உருவாகி இருக்கும் என்றும் சொல்லவே முடியாது .நிர்பந்தத்தின் அடிப்படையில் தொடங்கி இருக்க கூடும்.ஆணை அப்படி எல்லாம் செய்யலாது என்கிறார்கள் . இல்லை அப்படி நடந்திருக்கு என்று சொல்லுகிறான் ...வேண்டா வெறுப்பாக பங்கு பெறும் இதுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுது ...உனக்கு மல்டிபிள் ஓர்கசம் ஒன்று இருக்கு கேள்விபட்டிருக்கியா என்றான். வந்தது போச்சுது என்று தானே நாம இவ்வளவு காலம் இருந்திருக்கிறம் ,இதை எல்லாம்  எங்கு தெரிஞ்சு வைத்து கொண்டு இருக்கிறம் என்று சொல்ல இவ்வளவு விரக்தியில் இருக்கும் பொழுதே வாய் விட்டு சிரித்து விட்டான்.ஆழ்ந்த நித்திரையில் உள்ளவனை எழுப்பி  முடிஞ்சு படுக்க  மீண்டும் மீண்டும் எழுப்பி பின்  அவள் படுக்கவைத்தாலும் அதில் இயலாமால் போகவில்லை வெறுப்புதான்   அடைந்தான்

இவ்வளவு விபரமும் மொழியும் தெரிந்த முட்டாளுக்கு இதிலிருந்த விடுபட வழி சொல்லுவதை விட செயலில் தான் காட்டினான் .இந்த நாட்டின் இந்த எல்லையிலிருந்து வெகு தூரத்திலுள்ள அந்த எல்லையுள்ள கிராமத்தில் உள்ள தமிழ் நண்பர் வீட்டில் வசிப்பதுக்கு  அனுப்பியது மூலம் அவன் வந்த ஆரம்பத்தில் உதவி செய்ததுக்கான  நன்றியை செலுத்தி கொண்டான்.
சில காலத்தின் பின்னர் அந்த தமிழ் நண்பர்  மட்டும் தான் டெலிபோன் எடுத்து அவனைப்பற்றி நேரத்துக்கு நேரம் வித்தியாசம் வித்தியாசமான கதைகள் சொல்லி கொண்டிருப்பார்..அவன் அவனுக்கே ஆயிரம் கதைகள் இருக்கு அதுக்கே முடிச்சு அவிழ்க்க முடியாமல் தவிக்கும் பொழுது உது  எல்லாம் நினைவில் வைத்து காவிக்கொண்டா இருக்க முடியும் அதிலேயே கேட்டு  அதிலையே விட்டு விடுவான் .ஒரு நாள் அவர் எடுத்து அவனை வீட்டாலையே துரத்தி விட்டாதாக கூறினார்.இத்துடன் அவனை பற்றிய டெலிபோன் தொல்லையும் தீர்ந்தது என்ற நிம்மதி.

இவ்வளவு காலமும் இருக்கும் அந்ந கிராமத்தின் நகரத்தின் அந்த கோப்பி கடையை எவ்வளவு தரம் கடந்து சென்று இருப்பான். நிலக்கீழ் அறையில் கூட அங்கு  வியாபரம் நடைபெறுவதாக கேள்வி பட்டு இருக்கிறான்  விற்பது கோப்பி இல்லை என்பது மட்டும் தெரியும் மற்றும்படி வேற விபரங்கள் தெரியாதுஅவனுக்கு .தெரிய வேண்டிய நேரமோ என்னவோ தெரியாது  அவனை மாதிரியான உருவம் அசைந்து அந்த கடைக்குள் உள் சென்று கொண்டிருந்தது.அதுவும் இந்த கிராமத்துக்கு வரவே மாட்டன் என்று உறுதியுடன் சென்றவன் ஏன் இப்ப அல்லது ஏற்கனவே இங்கு வந்துவிட்டானா என்று எண்ணங்கள் விரைந்து கேள்வியை பதிலை தந்து திருப்தியடையாமால் மீண்டும் கேள்வியை எழுப்பி கொண்டிருந்தது..தன்னை தூக்க முடியமால் அசைந்து அசைந்து நடந்து  கொண்டிருந்தவனை இவ்வளவு விரைவாக பின் தொடந்து அதுவும் கடைக்குள் சென்றவனை தவறவிட்டு அங்கு மிங்கு தேடி கொண்டிருந்தான் .

ஒரே புகைமூட்டமாக விருந்தது.அந்த நேரத்தில் ஒரு கறுப்பன் அவனிடம் நட்பை உருவாக்கும் நோக்கில் புகைக்கிறியா என்று நீட்டினான்.இல்லை என்று சொல்லி கொண்டு திரும்பு பொழுது நெருக்கம்  குறைந்த புகை மூட்ட இடை வெளியூனூடாக கீழே செல்லும் படிக்கட்டு பாதை தெரிந்தது.படிக்கட்டு பாதை கூட ஒரு சரிவாக நடக்க கூடியதாக இருக்காமால்  குத்தனமாக இருந்தது .போதையில் கூட ஒரு அடி பிசகாமால் ஆட்கள் மேலேயும் கீழேயும் போய் கொண்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அதை விட ஆச்சரியம் காத்திருந்தது.அவன் கீழ் தளத்துக்கு சென்ற பொழுது  வேறு  புதிய உலகம் போல் இருந்தது .ஆண்களும் பெண்களும் சிரிப்புகளும் கேலிகளும் சினுங்கலும் அனுங்கலும் இருட்டும் மறைந்து தெரியும் வண்ண ஒளியுமாய் தமிழ் பட கனவு காட்சி பின்புலம் போன்று தோற்றமளித்தது.ஜோடியில்லாமால் சுவரோடு சாய்ந்து கொண்டிருந்த பெண் ஒருத்தி தோளில் கை போட்டு புகைக்கிறீயா நட்புத்துவத்துடன் இவனை அணுகினாள்.இல்லை என்று திரும்பி பார்க்கும் பொழுது அவனும் அவளும் இந்த உலகத்துக்குள்ளேயே வேறு உலகத்தில்  இருந்து கொண்டிருந்தார்கள் முத்தங்களை சொரிந்து கொண்டு அலங்கோலமான நிலையில் அரவணித்துக்கொண்டும் . அவள் அவனின் மம் என்று முன்பு அழைக்க பட்ட அந்த நடுத்தர டச்சு பெண்மணி தான் .இன்னும் மிக படு கிழவியாகி இருந்தாள் போதை மருந்து பாவிப்பினால்  இவனும் தான்...இது எப்ப கூடி என்று அவனை கேட்க மனம் வரவில்லை அப்ப கூடி இருந்திருக்கும்  என்று நினைத்தவன்  இதை மறைத்த கோபத்தில் வந்த வேகத்தில் திரும்பி நடக்க  தொடங்கினான்.

பலத்த குரலில் போகாதே நில் என்னவென்று கேட்டு விட்டு செல் என்று தமிழில் அவன் போட்ட கூப்பாடு அந்த இடத்தை அதிர வைத்தது.  அமைதியானது.ஒரு கணம் திரும்பி பார்தவர்கள் மறுகணம்  வேறு உலகத்துக்கு சென்று விட்டனர் .அவன் நிதானமாக அவனிடம் கூறினான் .அண்மையில் தான் ஏதோ விதததில் அறிந்து டெலிபோன் எடுத்து தன்னை ஒருக்கால் வந்து பார்த்து போகும் படி கூறினாள் .விரைவில் செத்து  போய் விடுவனோ என்று பயமாயிருக்கு என்றாள் . இந்த போதை பழக்கத்துக்கு  என்னை அடிமையாக்கி உறவுக்கு பயன் படுத்தினாள் என்றாலும் இப்ப என்னிடமிருந்து அன்பை தேடுகிறாள் ..தனது சொத்தின் ஒரு பகுதியை எனக்கு எழுதி வைத்திருக்கிறாள்.அவள் மாதிரி நானும் செத்து கொண்டிருப்பது  அவளுக்கு தெரியாது..என்னை மறந்து இவ்வளவு காலமும் இருந்த படியால்  ஏதும் உதவி செய்யாமால் இருந்து விட்டேன்  ஊரிலுள்ள வலது குறைந்த சகோதரங்களுக்கு..இதை வைத்து ஏதாவது செய்யணும் போல இருக்கு என்றான்.போதை மருந்து பாவித்தால் நல்ல மகிழ்வான கற்பனை  உருவாக்கும் என்று கேள்வி பட்டிருக்கிறான் அது போல  இதுவும்  என நினைத்து  இந்த கர்ம சொத்துகள்  அதுகளுக்கு எதுக்கு என்று கூறி அந்த இடத்தை விட்டு உடனடி வெளியேறினான்.

அவள் இறந்து  சில  காலத்துக்கு பின் சுரேஸ் இறந்து விட்டான் என்பது கூட பழைய கதையாகி விட்டது இப்ப.

சகோதரங்களுக்கு இந்த சொத்தை ஒப்படைக்க வழி செய்வான் என்று எண்ணி மரண சாசனம் இவன் பெயரில்  எழுதி வைத்திருக்கிறான் .
அது பற்றிய கடிதம் கிடைத்திருக்கிறது என்றது தான் இப்ப புதிய கதை

இந்த சொத்தை கொடுப்பான் என்றா  நினைக்கிறியள்?

வெள்ளைக்கு கதைக்கும் இவனை  போன்று பன்னாடைகள்  சொத்து விசயத்தில் கில்லாடிகள் ..

இவன்  இப்ப ஆணித்திரமாக தீர்மானித்து விட்டான் ..கொடுப்பதில்லை என்று

சில வேளை சுரேஸ் உயிர்தெழுந்து வந்து கூறினாலும் கூட

(மிதுவின் கிறுக்கல்கள் வலைபதிவுக்காக எழுதப்பட்டது)

No comments: