Pages

வாசகர் வட்டம்

Friday, January 10, 2014

பிள்ளை பிடிகாரர்




இது எப்ப நடந்தது என்று சரியாக என்னால் சொல்ல முடியாவிட்டாலும்  எனது பத்து வயதுக்கு உட்பட்ட காலத்தில் தான்.அந்த காலத்தில் நாங்கள் எதாவது குழப்படியோ எங்கள் பாதுகாவலரின் விருப்பத்துக்கு மாறாகவோ செய்தால் பிள்ளை பிடிகாரரிடம் பிடித்து கொடுத்து விடுவோம் என்று வெருட்டுவதுண்டு.சந்திரனை காட்டி சோறு ஊட்டுவதுமுண்டு .இப்படி வெருட்டுவதுமுண்டு.இதன் உண்மை பொய்மை தெரியாததால் மகிழ்வதுமுண்டு வெருள்வதுமுண்டு

.பிள்ளை பிடிகாரர் என்று யாரை தெரிவார்களென்றால் கொஞ்சம் குரூரம் ,கொஞ்சம் முரடன் ,பொதுவாக சராசரிகளின் தோற்றமில்லாதவர்களைதான்.றோட்டாலை வலது பக்கம் போகவேணும் இடது பக்கமாக வரணும் கரையாலை போகணொம் வான் பஸ் கார் வரும் கவனம் என்று ஆயிரம் உபதேசம் செய்து பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு உண்மையாகவே பிள்ளை பிடிகாரர் உலவாகினமாம் என்ற செய்தி காற்றில் அடிபட வயிற்றில் புளியை கரைத்தது.

எந்தந்த மனிதர்களை பிள்ளை பிடிகாரர் என்று சொல்லி வெருட்டினார்களோ அவர்களை மட்டுமன்றி போற வாற கந்தன் சுப்பன் கடம்பன்  எல்லாரையும் சந்தேகித்தார்கள்.மாய மனிதன் ,பேய்  மனிதன் உலாவுகிறார்கள் என்ற மாதிரி தான் பிள்ளை பிடிகாரர் என்ற  செய்தியா உலவா தொடங்கியது. ஏனெனில் கண்டவர் விண்டிலர்  விண்டிலர் கண்டவர் என்ற மாதிரி ஒருதர் கூட சரியான விபரங்கள் உறுதி படுத்தியவர்கள் இல்லை.ஆனால் இந்த கதை


ஊதி பெருத்து அந்த கிராமத்தில் ஒரு பட படப்பை  உருவாக்கி இருந்து . இந்த மனிதர்களின் படபடப்பு  வீட்டு பிராணிகள்  தொற்றி இருக்கலாமோ என்னமோ சம்பந்த மில்லாத நாய்களின் குரைப்பும் இனம் தெரியாத பறவைகளின் அலறல் சத்தமும்  உறுதி படுத்தின. இந்த சில தான் தோன்றிதன மான  சில உண்மைகள் கதை கட்டுமான பணிகள் கிடைக்காமால் ஏங்கும் சிலருக்கு  இது அவல் மாதிரி  கிடைத்தமையால் ...நல்லாய் மென்று என்னவென்று தெரியாத உணர முடியாத ஒரு பய பீதியை உருவாக்கி  விட்டிருந்தார்கள் . ஆடு  மாடு தான் இருள முந்தி  கட்டு போகும் நிலமை இல்லாமால் ..சிறு பிள்ளைகளுக்கு  உள்ள பிரச்சனை என்று போய்  வயது வந்த பெரிசு இளசு குமரு குஞ்சுகள் கூட இருள முன் வேளைக்கே வீட்டுக்குள் இரட்டை பாடு தாள் போட்டு வீட்டுக்குள்  அடங்கி விடுவார்கள்.இந்த மாயன அமைதியே பயத்தை  ஒரு வித கிலியை பல மடங்காக்கி விட்டிருந்தது.

தண்டால் போட்டு உருட்டு கட்டை சுழட்டி சராசரிக்கு மேல் உண்டு  உறங்கி வடகத்தைய காளை மாடு போல் திரண்டு இருக்கும் அவ்வூர்  இளைஞர்கள் விரும்பியோ விரும்பமாலோ களத்தில் இறக்க பட்டார்கள், வெறும்  உடம்பை காட்டி  தங்கள் வனப்பை எதிர்ப்பாலாரை கவரும் தொழிலை மட்டுமே செய்தவர்கள் களத்தில் நிற்க மிகவும் கஸ்டப்பட்டார்கள் . .  இந்த தொழிலை செய்ய  திணித்த ஊர் பெரிசு களின் மேல்  உள்ள ஆத்திரத்தை சும்மா போற வாற நோஞ்சான்  நொடுக்கு பேர்வழிகளில் காட்டினார்கள்.பிள்ளை பிடிகாரரின் ஆயுதமாக  மயக்க மருந்து புகை கருவி பாவிப்பதாக செய்தி ஊடகங்கள் எழுதி குவித்தது .இது தங்கள் மீதும் பிரயோகிக்க பட்டு விடுமோ என்று அஞ்சி சில இளைஞர்கள் பின் வாங்கினார்கள் .இதை பெரிசுகள் மட்டும் கேலி செய்யவில்லை . ஒரு கண் வைத்திருந்த பெண் புரசுகள் இவர்களது இவ்வளவு தானா என்று குசு குசுக்க தொடங்கி விட்டார்கள்.இந்த இடையை பாவித்து நடுத்தர பெரிசுகள் தங்களின் அந்த கால வீர பிரதாபங்களையும் தான தண்டத்தையும் பிரகடன படுத்த தொடங்கி விட்டார்கள்

றோட்டாலை பள்ளி கூட்டி கொண்டு போகாமால் தோட்டம் ,துரவு,காணி பூமிக்கால் உள் பாதையூடாக அனுப்பினார்கள் . அப்படி இருந்தும்  உண்மையில் எங்கள் வகுப்பு மாணவன் ஒருவன் காணாமால் போனான் . அப்பவும் அது பிள்ளை பிடிகாரன் பிடித்து கொண்டு போகவில்லை பெற்றோரின் கொடுமை தாங்காமால ஓடி போட்டான் என்று  பள்ளி கூட தரப்பு ஒரு கதை கூறியது. அது சில வேளை உண்மையாக இருக்கலாம் என்று சிலர் நினைத்தார்கள் . அவன் எப்பாவது பள்ளிக்கு வருவான் .வந்தாலும் ஆசிரியர்களின் அரியண்டம் தாங்காமால் பாதி நாள் பள்ளியிலையே காண கிடைக்காது.எனக்கென்னவோ அவனில் இனம் தெரியாத விருப்பம் .அவனுக்கும் என்னில் அப்படியே...காலம் அதிக காலம்  அவனது  கதையை அமுக்க முடியவில்லை....புத்தளம் சிலாபம் போன்ற பகுதிகளுக்கு  அண்மையில்  உள்ள மீன்பிடி தீவுகளை சுற்றி வளைத்த பொலிசார்  பல சிறார்களை மீட்டார்கள் என்ற செய்தி கொட்டை எழுத்துக்களில் உலாவியது . செய்தி ஊடகங்கள்  சிறார்களின் பெற்ற  அனுபவ கதை என வித விதமாக எழுதியது . பள்ளியில் யார் என்று தெரியாத நிலை மாறி எல்லாருக்கும் தெரிந்த  ஒருவனாக வந்த பொழுது  அவனிடமே கதையை கேட்டேன்

தன்னை நாலுபேர் வந்து கைகுட்டை ஒன்றினால் தனது முகத்தில் மூடிய பின் தான் மயங்கி விட்டேன் என்றும் அதன் பின்  ஒரு கடற்கரை பிரதேசத்தில்   ஒன்றில் சட்டரீதியற்ற தொழில் செய்யும் இடத்தில் தொழில் செய்ய அமர்த்த பட்டதாகவும் .. பின் அங்குள்ளவர் கள் சொல்ல கேள்விபட்டதாகவும்  ஒவ்வொரு மாதமும்  இரு சிறுவர்களை   நரபலி க்கு பயன் படுத்துவார்களாம்  புதையல் எடுப்பதற்க்கு .என்று..தனது முறை வரும் முன்பு காப்பற்றப்பட்டதாக் கூறினான் . சொல்லும் பொழுது உயிர் தப்பிய சந்தோசம் அவன் கண்ணில் மிளிர என்  கண்ணிலும் தெறித்த்து.

அதன் பின்  பல பல வருடங்கள் கழிந்து பின் எதேச்சையாக அவனை  சந்தித்தேன்  ஒரு முட்டு சந்தில். நானும் இளைஞனாக அவனும் இளைஞனாக ..அவன் முன்பு போல சோம்பியவன் மாதிரி இல்லாமால் ஒரு கட்டு மஸ்த்தானவனாக இருந்தான் ... சந்தித்த கால கட்டத்து நடக்கும் விசயம் ஒன்றுக்காக அப்பிரதேசத்து தலைமை  ஆள் பிடிகாரனாக இருந்தான் . இரண்டு நாடுகளின் வாய்க்கால்  வரப்பு சண்டைக்காக  இந்த ஆள் பிடிப்பு வேலைக்கு தூண்டி  விட்டது வலுவான நாடு ...என்ன மயக்க மருந்து கொடுக்காமால்  ஒரு மயக்க உணர்ச்சி கோசத்தை வைத்து ...அவன் என்னிடமும் அரசியல் பேச முற்பட்டான் . அரசியல் எனக்கு  எப்பவும் பிடிக்காது  அரசியலும் தெரியவே  தெரியாது (சிலர் நமுட்டு சிரித்தால்  அதற்கு நான் பொறுப்பில்லை)..அதனால் அவனையே கதைக்க விட்டேன் எந்த குறுக்கீடில்லாமால்

எல்லாம் முடிந்து அவன் என்னிடமிருந்து விடை பெறும் பொழுது என்னிடமிருந்து ஒன்று மட்டும் தான் அவனிடம் சொல்ல வேணும் மாதிரி இருந்தது .ஆனால் அப்பொழுது  சொல்லவில்லை

யாருக்கோ கிடைக்க போகும் புதையலுக்கு நீ நரபலியாவதிலுமிருந்து தப்பி விட்டாய்

ஆனால்  இப்ப வேற வடிவத்தில்  யாருடையோ தேவைக்காக மீண்டும்  மாட்டி கொண்டாய் நீ ...என்று


...

No comments: