Pages

வாசகர் வட்டம்

Tuesday, August 03, 2010

எழுபதுகளில் தமிழ் சினிமா பெற்ற திருப்பு முனை1973 இல் வெளியான அரங்கேற்றம் தொடர்ந்து இன்று வரை சினிமாவை பாதித்து இருப்பதை புரிந்து கொள்ள முடியும் sex பிரச்சனைகளை பயன் படுத்த முடியும் அலசி ஆராய இயலும் என்ற உயர்தர நோக்கு இல்லாமல் செக்சை இனிமேல் காட்டி பணம் பண்ண முடியும் என்று இப்படம் நம்பிக்கையை துணிச்சலையும் அளித்ததை மறுக்க முடியாது. இதே காலகாட்டத்தில் வட நாட்டு இந்தி படமான நியூவேவ் தமிழில் அவளாக மாறி. சசிகுமாரும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் கடற்கரையில் உருளும் காட்சி மூலம் தமிழ் A பட அந்தஸ்து க்கான படவரலாறு ஆரம்பிக்கபட்டது. அதே நேரத்தில் நடுத்தர பிரமாண குடும்ப அக்கிராகர அவலத்தை அரங்கேற்றம் படத்தின் மூல கொண்டு வர முயன்றதால் பாலசந்தர் பல எச்சரிக்கைகளை எதிர்ப்பை எதிர்நோக்கினார். அரங்கேற்றம் படத்திற்க்கு இந்த ஆபாச அந்தஸ்து சமரசம் செய்யும் முதுகெலும்பில்லாத முடிவு தான் காரணம் தான் என்பதை மறுக்க முடியாது

இதன் பின் அடுத்து வெளி வந்த படங்களான அன்னக்கிளியும் 16 வயதினிலும் பழைய வகை சினிமாவில் உள்ள போர்மிலா வகை தன்மையை நிராகரித்ததுடன். திரை பின்னால் இருந்த டைரக்சன் இசை எடிட்டிங் கமரா போன்றவற்றை சிலாகித்து கதைக்க கூடிய வகையில் புதியதோர் டெக்னிக்கில் மாற்றத்தை செய்தன. இளையராஜா நாட்டார் பாடல்களை மேற்கத்தைய கலவையுடன் சேர்த்து இசை அமைப்பால். பாடல்களும் ஒரு வித்தியாசமான தோரணையில் வெளிவந்தன.. இந்த காலகட்டத்தில் தான்.நடிகர்களின் தனி ஏகோ போக உரிமையை மட்டும் நிராகரித்து திரைக்கு பின்னால் பணியாற்றுவர்களின் தனி தனி திறமை பற்றி உற்று நோக்கப்பட்டது. இந்த சினிமா மாற்று சூழ் நிலை இதன் பின்னர் வந்த ஒரு தலைராகம் படத்தின அபார வெற்றியினூடாக மேலும் வலுவாகியது. சென்னை போன்ற நகர் புறங்களில் வெற்றி பெறும் படம் உசிலம்பட்டி சோழவந்தான் போன்ற கிராமங்களிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

இந்த கால கட்டத்தில் தான் நடிகர்களுக்காக படம் ஓடிய நிலமை மாறி... டைரக்டர் களுக்காக படம் பார்க்கும் நிலை வந்தது. சினிமா பாமரச ரசனையை சற்று மாறு படுத்தி ரசிக்க வைக்கும் முயற்சி ஏற்பட்டது. மகேந்திரனின் முள்ளும் மலரும், உதிரி பூக்கள், பாலுமகேந்திராவின் அழியாத கோலங்கள் போன்ற படங்கள் கமராவினால் கதை சொல்லும் உத்திகளை பிரயோகித்து ரசிகர்களை ரசிக்க வைத்தன. இந்த கால கட்டத்தில் தான் கமலகாசன்,ஷோபா என்ற நடிகர்கள் தேசிய விருதுகள் பெற்றார்கள். பல அரசு பரிசுகளை பெற்ற படங்களான பாபு நந்தன் கோட்டின்,தாகம், ராஜாஜி கதையான திக்கற்ற பார்வதி, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ருத்ரைய்யாவின் அவள் அப்படித்தான், ஜெயபாரதியின் குடிசை, பாரதிராஜாவின், நிழல்கள் பாலசந்தரின் தண்ணீர் தண்ணீர் போன்றன இந்த காலத்தில் தோன்றின. இவை இலக்கிய வாதிகளின் பாராட்டையும் பெற்றன.. ஆனால் இதில் சில படங்கள் தான் ஓரளவு ஓடியது. இதன காரணமாக தொடர்ந்து தமிழ் சினிமா மாற்றமின்றி ஓர் தேக்க நிலையே காணப்பட்டது. இவ்வளவுத்துக்கும் மலையாள படவுலகமும் வங்களா படவுலகும் உச்சத்துக்கு சென்று கொண்டிருந்தன.

பின் வந்த படங்களில் வெறும் கலரையும் கமராவையும் காட்டி ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம்

4 comments:

http://rkguru.blogspot.com/ said...

பதிவு நல்ல இருக்கு.....வாழ்த்துகள்

bandhu said...

இது போன்ற சிறந்த படங்கள் தொடர்ந்து வராததற்கு ஏவிஎம் எடுத்த முரட்டு காளை மற்றும் சகல கலா வல்லவன் போன்ற குப்பை படங்களின் மாபெரும் வெற்றி ஒரு பெரிய காரணம்.

raja said...

குடிசை எனும் ஜெயபாரதி என்பவர் இயக்கியது தயை கூர்ந்து அதை திருத்திக்கொள்ளவும்

சின்னக்குட்டி said...

வணக்கம் ராஜா வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி ..இப்பொழுது ஜெயபாரதியின் பெயரையும் இணைத்துள்ளேன்