Pages

வாசகர் வட்டம்

Monday, March 02, 2015

(சிறுகதை)- அது ...அவனில்லை





ஏதோ ஒரு சத்தம் காது செவிப்பட்டறை வந்து அழுத்தியது .திடுக்கிட்டு எழுந்தாள் .சத்தம் வந்த திசையை அனுமானிக்க முடியாமால் அதிர்ந்ததுடன் அரண்டு இருந்தாள்,சுவரில் இருந்த மணிக்கூடு இது எழும்பும் நேரமல்ல அதையும் தாண்டியும் என உணர்த்தியது.யன்னலூடு நோட்டமிட்டாள் வெண்பனி கொட்டியிருந்தது .வந்து ஊரில் இருந்து புலத்துக்கு வந்து நாலு நாளாகியும் இரவு பகலும் மாறி இருந்தாலும் வெளி குளிரும் உள் வெப்பமும்  கூடி இறங்கினாலும் இந்த உலகத்தோடு ஒன்று இணைய முடியாமால் தவித்தாள் ,தனிமையும் விரக்தியும் குற்ற உணர்வும் இயலாமையும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு அழுத்தியது.

நாலு நாள் முதல் தான் கண்டவன் நானூறு நாள் தேக்கி வைத்த வெறியை தணிக்க முயன்றது உடலிலும் மனதிலும் தெறிக்க கட்டில் இருந்திருந்து எழும்ப மறுத்தது.கலைந்த ஒழுங்கற்று இருந்த உடையினூடாக  வலித்த தெரிந்த பற்குறியும் நகக்குறியும் இவளை கேலிசெய்தது,என்னவெல்லாம் பேசி எங்கையெல்லாம் வாதிட்டு முன்னோக்கிய பார்வை கொண்டவளாக முகம் காட்டி  இவ்வளவு காலமும்  முகம் தெரியாதவனுடன் இந்த கணத்தில் எல்லாம் கரைந்துவிட்ட கோபத்தை மறைக்க மீண்டும் வலிந்து யன்னலூடாக நோட்டமிட்டாள்.

ஒருத்தி நாயுடன் சென்று கொண்டிருந்தாள் .அவள் பாசையில் ஏதோ சொல்ல அது திரும்பி அவதானித்து கேட்டது ,பிறகும் ஏதோ சொல்ல தூரத்தில் ஓடியது .திரும்ப வந்து காலடியில் விளையாடியது மீண்டும் ஓடியது,,,அங்கும் இங்கும் ஓடிய மனதை இந்த காட்சி இந்த கணங்களில் நிற்க வைத்து சந்தோசம் கொடுத்தது, அதுவும் நீர்குமிழி மாதிரி உடைந்த்து ....இரவு தொழிலை முடித்தவன் பகல் தொழிலை முடித்து வர முன்  செய்யவேண்டிய காரியங்கள் என்னவோ எல்லாம் இருக்கு என்று சிந்தனை பட்டு அவசரப்பட்டு கட்டிலில் இருந்து துரத்தியது ..ஊர் ஞாபகங்கள் சூழ்ந்து கும்மாளமடிக்க அந்த நாளை தொடங்கினாள் ..அந்த கும்மாளத்தில் ஆமிக்காரன் முதல் கொண்டு ஊரில் தனது மனதை முதலில் பூக்கவைத்த  அவனும் அடிக்கடி பங்கு கொண்டிருந்தான்.

தூரத்தில் கேட்கும் ரயில் சத்தத்தின் அருகாமையில் இருந்த பழைய கைவிடப்பட்ட வீடொன்றில் தான் அவனும் இருக்கிறாள் என்பது அவளுக்கு தெரியாது ,ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அநேகர் நாட்டை விட்டு வெளியேறிய பொழுது பத்தோடு பத்தாக அவனும் போனதாக ஒரு கொசுறு செய்தி மட்டும் அறிந்திருந்தாள் அவ்வளவே ,,,எந்த நாட்டில் எந்த ஊரில் தெரியாது ..ஆனால்  அவள் வந்த நாட்டில் அந்த ஊரில்  நாலு கூப்பிடு தூரத்தில் அவன்.மூடிய கண்ணை கஸ்டப்பட்டு திறந்தான் ..அவனைப்போல சிதறிய பொருட்கள்  பல நாட்கள் சுத்தம் செய்த தளபாடங்கள் காலிபட்டில்கள் சூழ்ந்திருக்க அங்கும் இங்குமாக தங்களை மறந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.


வேலையா வெட்டியா இவர்களுக்கு அவசரப்பட்டு எழும்புவதற்கு .இவர்களை நாடோடி கூட்டம் என்றும் சொல்லலாமா என்றால் அப்படியும் சொல்ல இயலாது,,வீடற்றவர்கள்  ஒரு ஒழுங்குக்குள் வாழ விரும்பாதவர்கள் நாடோடிகள்  ,வாழ்க்கையை வெறுத்தவர்கள் ,நாட்டில் அரசே இருக்க கூடாது என்ற தத்துவவாதிகள் ,குடிகாரர்கள்  மருந்துக்கு அடிமையானவர்கள் சமூகத்தால் வெறுக்கப்பட்டவர்கள் என்ற பல வகையானவர்கள் .பத்து பதினைந்து பேர் வரை அங்கு ..ஜந்து ஆறு பேர் வெளியில் சென்றிருக்காலம் ...இப்படியான இடத்தில் ஏன் தான்  என்று எப்பவும் நினைத்து பார்ப்பதில்லை ..

அப்படி நினைத்தாலும் இங்கு வந்து சேர்ந்த  அன்று அந்த நாள்  அவள் தான் நினைவுக்கு வரும் ...அவள் தான் அந்த ரூமேனியாக்காரி இலியானா  .கொஞ்ச நாள் காணவில்லை ,,,இன்று யாருடன் படுத்து கிடக்கிறாளோ  ..அதை பற்றியும் அவனுக்கு கவலையில்லை  இப்ப இவனுக்கு பக்கத்தில் மூச்ச முட்ட கிடக்கிறாளே சூர்னாம்காரி அவள் தான் கொஞ்சநாளாக இவனின் அரவணைப்புக்குள்


அகதி முகாமிலிருந்து  ஊர் ஊராக  நாலு ஜந்து பேராக சேர்த்து ஊர் ஊரா வீடுகள் வழங்கியிருந்தது.  அப்பிடி அந்த இந்த ஊரில் இருந்த இரண்டு வீடுகளில் ஒருவீட்டில் இவனும் இவனுக்கு முன் பின் தெரியாத நண்பர்களும். என்றாலும் அதில் ஒருவன்  இவனை பற்றி அரசல் புரசலாக கொஞ்சம் கேள்வி பட்டிருந்தான். . அவன் யாழில் உள்ள பிரபல பாடசாலையில் பிரபல கிரிக்கட் வீரன் என்பது மட்டுமே ..அவனின் வித்தியாசமான சைட் கட்டும் வித்தியாசமான பூனை கண் மாதிரியாக இருந்தாலும்  அது அவனுக்கு பொருந்தி கவர்ச்சியூட்டுவதால் ஆண் சரி பெண் சரி இன்னொரு முறை பார்க்க  தூண்டுவதாக இருந்தான் .

 ஆனால் யாருடன் பேசாமால் அவன் அந்த மெளனத்தோடை எழும்பி ,திரிந்து மெளனத்தோடை உறங்குவது மற்றவர்களுக்கு எரிச்சலூட்டவதாய்இருந்தது...அவர்கள் அவர்கள் தங்கள் தங்கள் நினைத்தபடி அவனை பற்றி கதையை உருவாக்கினார்கள்.அதில் சிலரின் கதைகளில் அவனின் அழகுக்கு ஊரில் அவள்கள் காதல்கள் செய்யமாலாக இருந்திருப்பாகாகள்  ,அப்பிடி ஒருத்தி காதல் செய்து அவள் ஏமாத்தி அல்லது அவளால் ஏமாத்தப்பட்டு பெற்றாரால் பிரிக்கபட்ட பின் இப்படி ஆயிற்றான் என்பது. .அவர்களின் கற்பனை திறன் குதிரை வேகத்தில் பறந்தாலும்   சில நடந்திருந்தது என்பது  என்னவோ உண்மை தான்....ஆனால் இவனது இந்த போக்குக்கு  அது தான் காரணமென்று யாராலும் உறுதியாக சொல்ல முடியவில்லை.


பகல் பொழுது எப்பொழுதும்  திசை தெரியாமால் நோக்கமின்றி நடந்து செல்வான் . சில நாள்  வீடு திரும்ப மாட்டான் .எங்கு உண்டான் எங்கு உறங்கினான் என்பது வீட்டில் உள்ளவர்களின் கேள்வி இருந்தாலும் அவர் அவர்களுக்கு இருந்த சோலியில் முக்கியம் பெறாமால் இருந்தது .அல்டி போன்ற மார்க்கட்டுகளில் குறைந்த மலிவு விலை குடிவகைகளை  வாங்கி குடித்தாலும் பிரச்சனை இல்லாமால் இருந்தான் .ஒரு நாள் என்றுமில்லாதவாறு சத்தமிட்டான் .பொருள்களை அடித்து உடைத்தான் .கட்டுபடுத்த முடியாத ஒரு விசுவரூபம் எடுத்தான் .அம்புலன்ஸ் கொண்டு சென்றது .சென்ற வேகத்திலையே திரும்பி வந்தான் உளவியல் மருத்துவமனையிலிருந்து  அவனுக்கு ஒன்றுமில்லை என்று .
.

நினைத்து நினைத்து குடித்தான் .என்ன நினைத்து குடித்தது என்று யோசித்தான் .பிறகு அந்த காதலா என்று மண்டையில் அளவெடுத்து பார்த்தான் .சீ  ஸ்டுப்பீட் என்று துப்பினான் ..மீண்டும் ஒரு முரடு குடித்தான்  அது காரணமில்லை என்று  முழுமையாக நம்பினான் ..விளக்கமாக இவ்வளவு தெளிவாக இருக்கும் பொழுது எதுக்கு ஏன்  இந்த தேவதாஸ் கோலம்  தன்னை திருப்பி கேட்டான். .நாய் ஒன்று இல்லையே தவிர  மற்ற எல்லாம் அப்படியே இருப்பது போல் பிரமை கொண்டான். அந்த பாட்டு காட்சி மண்டையில் ஓட அந்த பாட்டை பாடிப்பார்த்தான்.  இரண்டு வரிக்கு மேல் வர மறுக்க மீண்டும் குடித்தான். அன்றைக்கு அந்த சிறுமி அவனை கண்டு வீறிட்டு அலறியது ஞாபகத்தில் வர ஒட்டு மொத்த போத்தலை உறிஞ்சி எறிந்த பின்  தெருவில் அரை குறை  உடுப்புடன்  நான் அவனில்லை ..நான் அவனில்லை  கூக்குரலிட்டு கொண்டு ஓடினான் .ஓடினான் .எவ்வளவு தூரம்  இப்பிடி ஓடி கொண்டிருந்தான் என்பது  அவனது நினைவில் இல்லாமால் இருந்தது.

சத்தம் கேட்டு அரண்டு பார்த்தான் .ஒரு பாழடைந்த வீட்டில் அழுக்கு பெட்சீட்டால போர்த்தியபடி  சிறிய விரிப்பில் கிடந்திருக்க கண்டான் .அதுவும் மிகுந்த அழுக்கானது ..அவனே பல நாள் குளிக்காதவனாக இருந்தும் கூட அங்கு இருந்த கெட்ட மணமும்  அந்த சூழ்நிலையும்  என்னவோ செய்தது. .எங்கே இருக்கிறேன் என்ற கேள்வி குறியுடன் முகத்தை வைப்பதை  கண்ட  அவள் தனது பெயர் இலியானா என்று அறிமுகம் செய்தாள் ..கட்டிடத்துக்கு அண்மையில் தான்   நட்ட ராத்திரியில் உங்களை மறந்து கிடந்தீங்கள் நானும்  நண்பர்களும் இங்கு வந்து சூடாக்கி  உறங்கி வைத்தோம் என்றாள் .

அலட்டிக்காமால் தூங்குங்க என்று அங்கங்கு சுற்றி இருந்த  தாடியுடனும் விகாரமான முகங்களுடனும் இருக்கும் ஆண்களும் .அரை குறை ஆடையுடனுமான பெண்களும் கூறினர்,

அங்கு எந்த வித ஹீட்டர் வசதிகளோ இருக்கவில்லை  .ஓரேயொரு சிறிய குமிழினூடாக தான் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. பட்டரிகளினூடக  இயக்க பட்டிருக்கவேணும் . தூரத்தில் நடு ஹாலில் சில சுள்ளிகளை வைத்து எரித்து கொண்டிருந்தான் ஒருவன்..அப்படியிருந்தும் குளிர் அவனுள் நுழைந்து விறாண்டியது .அங்கங்கு ஜோடியாக குளிரூட்டி கொண்டிருந்தார்கள் ,

அவர்கள் அவர்களுக்கு சொந்தமான அங்கங்கள் மற்றவர்களின் கையிலும் வாயிலும் உரிமை கொண்டாடி கொண்டிருந்தன..
 இலியானா இவனை  பார்த்து கனிவாக சிரித்தாள் .முதலில் அவளது அசைவு அவனில் பரிவு போல் தோன்றியது .அது  தேவை போல தோன்றியது .அவளது இன்னோரு அணைப்பும் இன்னொரு முத்தமும் குளிரின் கதகதப்பை குறைத்தது ..அங்கங்கை முயங்கிய சத்தங்கள் கேட்டு கொண்டிருந்தின ..இவனால்  இவளில் உருவாகிய  கீதமும்  அதனுடன் சங்கமித்தது

இவர்களோடு  இவன்  ஜக்கியமாகி நாளாகி விட்டது , இவன்  வைன் கோஸ்டிகளோடை திரிகிறானாம்  என்ற செய்தி  ஆங்கில கால்வாய் கடந்து  லண்டன் வரை  பரந்து விரிந்தது ,

 இவனோடு படித்த எப்போதும் ஊரில் திரியும் ஒருவன்  பெயர்  சங்கர்  அவனுக்கு கெளவர பிரச்சனை ஆனது .
 உதுகள் திருந்திற கேசுகளில்லை ...உப்படி  கனபேர் தம்பி  ஊரில் அப்படி அப்படி இருந்ததுகள் எல்லாம் இங்கால் பக்கம் வந்து  இப்படி இப்படியாகி  கோலம் மாறி திரியுதுகள்   என்று அங்கால் பக்கம் இருந்து இங்கால் பக்கம்  கிட்டடியில் வந்த அந்த பெரிசு ஒன்று சொல்லுறது கூட கேட்காமால்  கடந்து வந்தான் சங்கர்,


ஒழுங்கு செய்யப்பட்ட திருமணத்தின் பலனை கொஞ்ச நாளிலே புலத்தில் அனுபவிக்க தொடங்கினாள் அவள் .அந்த பந்த்ததின் விரும்பாத பக்கங்கள் தொடர்ந்து அழுத்த விட்டு விட்டு ஓடிவிடுவமோ என்று கூட யோசித்தாள். எங்கை ஓடுவது  மூன்று வருடத்துக்கு  முந்தி பிரிந்தால்  ஊருக்குத்தான் போக வேண்டும்  ஆட்கள் பயம் காட்டுவதை நினைத்து பார்த்தாள். ஊருக்கு போகவே போக முடியாது என்ற தெரிந்த உண்மையை தன்னை தவிர வேற யாருக்கும் இதுவரை தெரிய விட்டதில்லை ... செய்வதறியா  தவித்து கொண்டிருந்தாள்.

.எல்லா புலத்தின் விரும்பாத பக்கங்ளின் பாரம் ஒரு புறமும் வாங்கிய  பொருட்கள் பாரமும் மறுபுறமும் அழுத்த அந்த சுப்பர் மார்க்கட்டில்  வெளியில் வரும் பொழுது தான் சங்கரை சந்தித்தாள்.


அவன் இங்கிருக்கிறான்  அதுவும் பக்கதில் தான் அதற்கு மேல் இப்பிடி இருக்கிறான் என்று சொன்னது  ஆச்சரியமாய் இருந்தது.


அவன் அந்த கோலத்தில் இருப்பதுக்கு அவள் நினைப்பு தான் என்றது அதிர்ச்சியாய் இருந்தது...
அந்த நிலையிலும் தன்னை மறந்து சிரித்தாள் ...வெறும் பருவ சம்பவத்துக்காக இப்படி இருக்காமாட்டன் உறுதியாக நம்பினாள் , இது சங்கரின் முட்டாள தனமான் நினைப்பு மனதில் திட்டி கொண்டாள் .

அது உண்மையானால் எனது இக்காட்டான நிலையில் உதவியாக இருக்கும் என்று சுய நல நப்பாசை கொண்டாள்

அவன் வாய் விட்டு  ஆக்கோரசமாக சிரித்தான் .

எனக்கா பைத்தியம் உங்களுக்கா பைத்தியம் என்றான்
   இது சொல்லவா இவ்வளவு தூரம் லண்டனில் வந்தனி என்று துப்பினான்

எந்த உறவுகளை புதிப்பித்து கொள்ள தயாரில்லை  நான் வாழும் உலகம் வேறு உங்கள் முட்டாள்கள் உலகம் வேறு என்றான்

வாதங்கள் முத்தின பிரதி வாதங்கள் நடந்தன .ஆக்கிரமோசானான் .

..சங்கர்
நின்ற இடம் தெரியாமால் மாறினான்


எனக்கும் உனக்கும் எந்த உறவு இல்லை சொல்வதை  ஒரு கதைக்கு வைத்து கொள்ளுவம் ..இந்த கூட்டத்திலாவது என்னை சேர்த்து கொள்ளு  என்று அடம் பிடித்து அந்த இடத்தை போகாமால் நின்று கொண்டிருந்தாள்.


கோபத்தை தணித்தவன் இது எல்லாம் நடக்க கூடியதா ,என்று நல்லாய் யோசிச்சு சொல் என்று கேட்டான் ,

நான் ஒரு ஆண் என்ற படியால் ஏதோ தொலைஞ்சு போ என்று சும்மா விட்டிட்டினம்


ஒரு தமிழ் பெண்  நீ புலத்தில் இப்படி இருக்க நடக்க நம்ம சமூகம் விடுமா  அது தனது கெளவர பிரச்சனை பார்த்து உனக்கு வெடி வைத்துடும்.

  நல்லாய் யோசித்து பார் என்று நிதானமாக கூறினான்


அவள் தனது கருத்தில் உறுதியாக இருந்தாள் . ஏதாவது சுற்றிலாவது உன்னிடம் இருப்பேன் தானே  என்று கெஞ்சினாள்


மொழி ஒரு தடையாக இருக்கவில்லை  போலும்     எப்படியோ ஏதோ  புரிந்த  அந்த கூட்டத்தில் இருந்த ஹிப்பி  தலையன் ஒருவன்

அவன் கிடக்கிறான்  ,,கம்மோன் பேபி  யூ ஆர் வெல்கம் என்று ஆங்கிலத்தில் கூறி அவளை அணைத்தான்

தீடிரென்று அவனுக்கே   தெரியாதது  ஏதோ நடந்து  இருக்க வேண்டும்

தன் முழு பலம் கொண்டு தாக்கி அவளை விடுவித்து கொண்டு தூரத்தில் நடந்து கொண்டிருந்தான்

அவர்கள் மறையும் வரையும் பார்த்து கொண்டிருந்தாள் இலியானா

ஒரு  பரவசம் அவளில் ஓடி கொண்டிருந்தது.ஏன் என்று தெரியாமால்...


( இந்த சிறுகதை மிதுவின் கிறுக்கல்கள் என்னும் வலைபதிவுக்காக சின்னக்குட்டியால் எழுதப்பட்டது)